உளநலம் பேணுவதில் உங்களுக்கு விருப்பமா?

உளநலம் பேணுவதில் உங்களுக்கு விருப்பமா? அப்படியென்றால் அறிஞர் கௌசி என்ன சொல்கிறார் என்று படிப்போமா…

“உடலே உயிரை நிதமும் காக்கும் – இதைப்
புரியா துடலை மனிதன்
உருக்குலைத்து சீரழிப்பான் உண்மை” என்றும்

“நாமோ எதிலும் அக்கறையின்றி சாக்கடையினுள் அழுக்கைப் போடுவது போல் கண்டதையும் உண்டு உடலைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றோம்.” என்றும்

“பிற உறுப்புக்களுக்காகத் தொழிற்படும் மூளை தனக்காக ஓய்வெடுத்து தன்னிலுள்ள நச்சுத் தன்மையை வெளியகற்றும் நேரம் உறக்கமல்லவா? ஆனால், நாம் என்ன செய்கின்றோம். இரவிரவாகக் கண்விழித்து தூக்கத்தைக் கெடுத்து chat பண்ணுகின்றோம். Party கொண்டாட்டங்கள், தொலைக்காட்சி என்று உறங்கும் நேரத்தைத் தொலைக்கின்றோம்.” என்றும்

கணினியை ஒழுங்குமுறைக்கு உள்ளே பாவிக்காது நாம் எமது கண்களைக் கெடுக்கிறோம் என்றும் கடைசியில் “செய்வதெல்லாம் செய்து விட்டு நேர்த்திக்கடனென்றும் நேர்மையற்ற மருத்துவரென்று, போதாத காலமென்றும், பொல்லாத உலகென்றும் அடுத்தவரைக் குறைகூறி அழிவது நாமே.” என்றும் அடித்துச் சொல்கிறாரே!

உளநலம் பேணுவதில் நம்மவர் நிலையை இப்பதிவினூடாகக் காண்கிறேன். தளம் (சுவர்) இருந்தால் சித்திரம் வரையலாம். அது போல உடலை நலமாகப் பேணுவதில் தான் நீண்ட நாள் வாழலாம். அதற்கு உள்ளத்தில் நல்ல எண்ணம் வேண்டும். அதாவது அறிஞர் கௌசியின் எண்ணங்களைப் பேணுவதோடு கேடுகெட்ட எண்ணங்களை உள்ளத்தில் இருத்தாமல் நல்லெண்ணங்களை உள்வாங்கி, நல்லதையே எண்ணி உளநலம் பேணினால் உடலையும் நலமாகப் பேணுவதோடு நெடுநாள் வாழலாமே!

உங்களுக்கு நெடுநாள் வாழ விருப்பமா? அப்படியென்றால் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் கௌசியின் பதிவைப் படித்துப் பாருங்களேன்.
http://www.gowsy.com/2014/10/blog-post_26.html

4 responses to “உளநலம் பேணுவதில் உங்களுக்கு விருப்பமா?

  1. மிக்க நன்றி சகோதரனே. நாமும் வாழவேண்டும். நம்மோடு இணைந்தே பலரும் வாழவேண்டும்

  2. அய்யா, நான் மேலே சொல்லப்பட்டவற்றில் எதையுமே பின்பற்றுவதில்லை… உழைப்பால் உழைத்ததால்தான் எமக்கு உறக்கம் வருவதில்லை.