மனிதவள முகாமை

ஆளணி (மனித) வள முகாமைத்துவத் தீர்வுகள்
(Human Resource Management Solutions)

இன்றைய நாட்டுநடப்பில் பல நிறுவனங்கள் சோர்விலும் (நட்டத்திலும்) சில நிறுவனங்கள் தேட்டத்திலும் (இலாபத்திலும்) இயங்குகின்றன. இவற்றிற்கான காரணம் ஆளணி (மனித) வள முகாமைத்துவத்தில் தவறு அல்லது ஆளணி (மனித) வள மேம்பாடு சரியில்லை எனலாம். எல்லோரும் ஆளணி (மனித) வள முகாமைத்துவம் பற்றித் தெரிந்திருத்தால் பணித் தளங்களில் இலகுவாக உறவுகளைப் பேண முடியும்.

குறித்த ஓர் அமைப்பு அல்லது குழு (கட்சி) அல்லது நிறுவனம் தமது உறுப்பினர்களை அதாவது ஆளணி (மனித) வளங்களை ஒழுங்குபடுத்திப் பேணும் நெறி ஆளணி (மனித) வள முகாமைத்துவம் எனலாம். ஒரு நாட்டின் முதன்மைச் சொத்து ஆளணி (மனித) வளம் என்பதை எவரும் மறுப்பதிற்கில்லை.

உளவியல் நோக்கிலும் அமைப்பின் அல்லது குழுக்(கட்சி)களின் அல்லது நிறுவனங்களின் அல்லது நாட்டின் கோட்பாடுகளின் அடிப்படையிலும் ஆளணி (மனித) வளம் பேணப்பட வேண்டியிருக்கிறது. அதாவது, பொருத்தமான துறையில் பொருத்தமான பதவியில் பொருத்தமான ஆளை அமர்த்தி; அதற்கேற்ப முகாமைத்துவம் செய்யவதாகும். தேவைகளை அல்லது அறுவடைகளை ஈட்டத் தேவையான ஆள் எண்ணிக்கை போதுமானது.

இந்த ஓழுங்கமைப்பில் ஆளணி (மனித) வள வளர்ச்சி என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுப் பேணப்பட வேண்டும். உளவியல் நோக்கில் ஒருவரை ஒருவர் நோகடிக்காத உறவுமுறை பேணப்பட வேண்டும். மேலும் துறைசார் கல்வி மற்றும் துறைசார் பயிற்சி அத்துடன் காலத்துக்குக் காலம் மாறும் துறைசார் நுட்பங்கள் யாவும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இங்கு தனியாள் விருத்தியும் நிறுவன இலக்கும் மேம்படத் தேவையானவற்றை பேணப்பட வேண்டும்.

ஆளணி (மனித) வள மேலாளர் பின்வருவனவற்றைக் கண்காணித்து மேம்படுத்துதலில் அக்கறை காட்டவேண்டும்.
1. பொருத்தமான வேலைக்குப் பொருத்தமான ஆள் சேர்த்தல்
2. துறைசார் கற்றல்/ பயிற்சி/ நுட்பம் வழங்குதல்
3. ஆளணி (மனித) வள விரிப்பைப் பேணுதல்
4. பணியாளர் வரவு, வேலை நேரம் கண்காணித்தல்
5. சரியான நேரத்தில் சம்பளப் பட்டியல் தயாரித்தல்
6. பணியாளர் செயல்திறன், சம்பள உயர்வு, மேலதிக நேரக் கொடுப்பனவு, சிறப்புக் கொடுப்பனவு எனப் பணியாளர் நலனில் அக்கறை காட்டுதல்
7. பணியாளர்கள் அதாவது ஆளணி (மனித) வளம் என்பது அமைப்பின் அல்லது குழுவின் (கட்சியின்) அல்லது நிறுவனத்தின் அல்லது நாட்டின் சொத்து அல்லது முதலீடு எனப் பேணவேண்டும்

எப்போதும் ஆளணி (மனித) வள மேம்பாடு முறையாகப் பேணுகின்ற நிறுவனங்கள் தேட்டத்திலே (இலாபத்திலே) இயங்குகின்றன. எப்போதும் ஆளணி (மனித) வள மேம்பாடு முறையாகப் பேணத் தவறுகின்ற நிறுவனங்கள் சோர்விலே (நட்டத்திலே) இயங்குகின்றன. இதற்கு, ஆளணி (மனித) வள முகாமைத்துவமும் ஆளணி (மனித) வள மேம்பாடும் (Human Resource Management and Human Resource Development) முக்காயமாகப் பேணப்பட வேண்டும்.

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.