Monthly Archives: ஓகஸ்ட் 2013

தெரியாதோ நோக்கு!

பெரிய ஆள்: என்னடா சின்னப் பொடியா, புல்லும் காட்டுக் காய்களும் கொண்டு பயணம்?

சின்ன ஆள்: பாவற்காய், புடோலங்காய், தேங்காய்ப்பூக் கீரை, பனங்கீரை எல்லாம் நாளைக்குச் சமையலுக்கண்ணே!

பெரிய ஆள்: உங்கட வீட்டாருக்கு உருளை, மரவள்ளி, பீற்றூட், கரட் போன்ற நாட்டுக் கறிகள் விழுங்க மாட்டினமோ?

சின்ன ஆள்: எங்கட வீட்டாருக்குச் சீனிச் சக்கரை நோய் காணும்! உந்தச் சீனிக் கறிகளை உண்டு சாவதை விட கய்ச்சல், புளிச்சல் உண்டு வாழலாமே!

பெரிய ஆள்: அதுக்காக ஆடு, மாடுகளைப் போல புல், பூண்டுகளையே தின்னுறது…

சின்ன ஆள்: அதண்ணே, உங்களுக்கும் சீனிச் சக்கரை நோய் வந்தால் புரியும் அண்ணோய்!

குறிப்பு:- நீரிழிவு நோயாளிகள் இலைக் கறிகளுடன் தானிய வகைகள், பனம் பண்டங்கள் சாப்பிடலாம். அரிசி, மா, கிழங்கு போன்ற சக்கரைச் சீனிச் சாப்பாட்டை நிறுத்தவேணும் பாருங்கோ!

உங்கள் காதல் உளவியலைக் கூறுங்கள் பார்ப்போம்!

காதல் செய்வோர் உளவியல் தெரிந்திருந்தால் வெற்றி பெறலாம். அப்படியாயின், உங்கள் உளவியல் அறிவை வெளிப்படுத்த இப்பதிவைப் பாவிக்கவும். உங்கள் காதல் உளவியலை வெளிப்படுத்தத் தொடர்ந்து படியுங்கள்.

A; C ஐக் காதலித்துத் தோற்றவர்.
B; D ஐக் காதலித்துத் தோற்றவர்.
A; D ஐக் காதலிக்கத் தொடங்கினார்.
B; C ஐக் காதலிக்கத் தொடங்கினார்.
B; C இருவரது காதலும் வெற்றி பெற்றது.
A; D இருவரது காதலும் தோல்வி கண்டது.
A; D இருவரும் முதலில் காதலித்ததை மறைத்தமையால் தோல்வி கண்டனராம்.
B; C இருவரும் முதலில் காதலித்ததை வெளிப்படுத்தியமையால் வெற்றி பெற்றனராம்.

A, B, C, D ஆகியோரின் காதல் பிரிவு, காதல் தோல்வி, காதல் வெற்றி பற்றிய கருத்துகளைக் காதில் போட்டு, உங்களுக்குத் தெரிந்த காதல் உளவியல் அல்லது உளவியல் நோக்கிலான காதல் பற்றி விளக்குவீர்களா?

உங்களுக்கு உதவி தேவைப்படின் (https://mhcd7.wordpress.com/2013/04/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/) “உளவியல் நோக்கில் காதல்” என்ற பதிவைப் பார்க்கலாம்.