Monthly Archives: பிப்ரவரி 2014

எத்தனை முறை சொல்வது?

எம்மைப் பெத்ததுகள்
அடிக்கடி தொல்லை தருவார்கள்
“படிச்சாத்தான் உழைக்கலாம்” என்று…
உழைப்பில்லாத போது தான்
நானும் அதை உணர்ந்தேன்!
நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள்
“காதலென வாலைகளுடன் சுத்தாதை” என்று…
எவளைச் சுத்தினேனோ – அவளோ
நண்பர்களாகப் பிரிவோம் என்றும்
பெத்ததுகள் பொருத்தியவரைத் தான்
மணமுடிப்பேன் என்றும்
சொன்ன பின்னே தான்
நண்பர்கள் சொன்னதை
நானும் உணர்ந்தேன்!
கட்டையிலே போகவுள்ள கிழடுகள் திட்டுவார்கள்
“சந்திக்குச் சந்தி குழுக்களாக நிற்காதை” என்று…
காவற்றுறை ஒரு நாள் சிறைப்பிடித்ததும்
நானும் அதை உணர்ந்தேன்!
உணர்ந்த படியால் சொல்கிறேன்
“சொல்லிக் கேட்காதோர்
பட்டுத் தெளிவார்கள்” என்றே!
முதற் தவறு – குழந்தைகள் போல
தெரியாமல் செய்தது எனலாம்…
இரண்டாம் தவறு – இளசுகள் போல
பாதிப்புணராமல் செய்தது எனலாம்…
மூன்றாம் தவறு – குரங்கைப் போல
திருந்தாத முட்டாள்கள் செய்வதே!
ஒழுக்கம் பேணடி…
கற்பொடு கண்ணியமாய் இரடி
களவுறவை நாடாதையடி…
பெண்களுக்குப் பெரியோர்
இன்னும் பல சொல்லியிருக்கலாம்…
படியடா…, ஒழுக்கம் பேணடா…
உழைத்துப் பிழையடா…
நாலு காசை வைப்பிலிடடா…
குடியைப், புகைத்தலை விடடா…
களவுறவை நாடாதையடா…
ஆண்களுக்குப் பெரியோர்
இன்னும் பல சொல்லியிருக்கலாம்…
நடுவழியே
நான் பார்த்ததிலே
காளைகளும் வாலைகளும்
நாலு காசுக்குக் கையேந்துறாங்களே…
எத்தனை ஆட்கள்…
எத்தனை முறைகளில்…
எத்தனையோ வழிகாட்டல்களை
சொல்லியிருந்தாலும் கூட – அவை
தெருவில் வாழும் ஆள்களுக்கு
குரங்கின் கையில் கிடைத்த பூமாலையா?
ஓ! மனிதா!
பட்டபின்; கெட்டபின்;
நெஞ்சைத் தொட்டு அழுவது சரியோ!
பிறர் சொற்கேட்டுத் தெளிவு பெற்றால்
தெருவில் வாழும் நிலை வருமோ!
பிறரது வழிகாட்டல்களை
காதில் விழுத்தாட்டிலும்
உங்களது – சொந்த
அறிவைப் பாவித்தும் கூட
நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்பலாமே!

சில மணித்துளிகள் நேரத்தில்…

கோபம் (ஆத்திரம்) வந்து விட்டால்
மூளைக்குச் செந்நீர் (குருதி) செல்லாதே – அந்த
சில மணித்துளிகள் நேரத்தில் – நம்ம
ஆளுகள் போடும் கூத்துத் தரும்
பெரும் பாதிப்புகளை எண்ணிப் பாரும்!
தற்கொலை எண்ணம் இருக்கே – அது
சில மணித்துளிகள் வரை
ஆட்டம் போடும் – அதை
கடந்து விட்டால் வாழ்வு தான்!
ஆமாம்,
தற்கொலை எண்ணம் கொண்டோரை
அடையாளம் கண்டுவிட்டால் – அந்த
சில மணித்துளிகள் நேரத்தில் – அவருக்கு
முறையாக வழிகாட்டத் தவறினால்
சாவைத் தான் பார்க்க முடியுமே!

குறிப்பு: சில மணித்துளிகள் நேரத்தில் முறையாக எண்ணமிட்டுச் சரியான வழியைத் தெரிவு செய்வதன் மூலமே கோபம் (ஆத்திரம்), தற்கொலை இரண்டிலிருந்தும் விடுதலை பெறலாம்.

குறுநடைக் குழந்தைக்கு வாசிப்பு பழக்கத்தை வளருங்கள்

குறுநடைக் குழந்தைக்கு வாசிப்பு பழக்கத்தை வளருங்கள்.

via குறுநடைக் குழந்தைக்கு வாசிப்பு பழக்கத்தை வளருங்கள்.

நீ நீயாகவே இரு

அப்பனும் ஆத்தாளும்
ஊட்டி, உறுக்கி வளர்த்துவிட்டது
தங்கட பிள்ளை
நீ என்று நினைத்துக் கூட அல்ல…
நீ நீயாகவே இருந்தால்
உனக்கென்று ஓர் அடையாளம்
இருக்குமென்று தான்!
உன்னை
அடித்து நொறுக்கிப் படிப்பித்தது
தங்கட வயிற்றுப் பசியை
பின்னாளில் – நீ
போக்குவாய் என்றெண்ணியல்ல…
நீ நீயாகவே இருந்தால்
உனக்கென்று ஓர் அடையாளம்
இருக்குமென்று தான்!
நீ உன்னையறிந்தால்
உன்னுடைய
அப்பன், ஆத்தாளை நினைத்தால்
நீ நீயாகவே இருந்தால்
உனது
அடையாளம் நன்றாயிருந்தால்
ஊருக்குள்ள நீதான் பெரியாள்!
உன் நிலையை மறந்து
அடுத்தவரை நம்பிக் கெட்டு
உன் பலத்தை வலுப்படுத்தாமல்
நீ நீயாகவே இன்றி
மாற்றானின் நிழலாக மாறினால்
ஊரே உன்னை மதிக்காது!
உனக்கென்று
ஒரு சுய பலத்தை உருவாக்கி
நன்மதிப்பை
உன் அடையாளமாக்கி
நடை போட முயன்று பார்…
ஊரும் உலகும்
உன்னைப் போற்றும்
அப்பதான்டா
உன் அப்பனும் ஆத்தாளும்
மகிழ்வடைவார்களடா…
அதற்காகவேனும்
நீ நீயாகவே இரு!

மருத்துவர்களே! மதியுரைஞர்களே! வழிகாட்டிகளே!

என் உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே!

நாம் வலைப்பூக்கள், வலைத்தளங்கள் போன்ற மின் ஊடகங்களில் தமிழைப் பரப்புவோர், இலக்கியங்களை வெளியிடுவோர் தள முகவரிகளைத் திரட்டி http://thamizha.2ya.com/ தளத்தில் களஞ்சியப்படுத்துகிறோம்.

இச்செயலால் பல அறிஞர்களை, பல வலைப்பூக்களை, பல வலைத்தளங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் பலரது பல கோணத் தமிழ் ஆய்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, இச்செயற் திட்டத்தின் மூலமாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழி பிறக்கும் என நம்புகிறோம்.

நீங்களும் உங்கள் வலைப்பூ, வலைத்தள முகவரிகளை எமது http://thamizha.2ya.com/ தளத்தில் இணைத்து உலகெங்கும் உங்கள் அறிவைப் பரப்ப முன்வாருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்