Monthly Archives: மே 2013

அகவை ஏறிய (வயது போன) பின்னும் உடலுறவா?

மணமுடித்து நான்கு பிள்ளைகளும் ஆன பிறகு உறவுக்காக அழைப்பது சரியில்லை என முட்டி மோதும் குடும்பத்தினருக்காக, மணமுடித்துப் பிள்ளைகளே பிறக்காது என்ற பிறகும் உறவுக்காக அழைப்பது சரியில்லை என முட்டி மோதும் குடும்பத்தினருக்காக, அகவை ஏறிய பின்னும் உடலுறவு தேவை என்பதைக் குறிப்பிடுகிறேன்.

சிரிக்கின்ற போதும் அழுகின்ற போதும் மட்டுமல்ல எமது ஒவ்வொரு செயலிலும் குறித்த எண்ணிக்கை நரம்புகளே செயற்படுகின்றன. நரம்புகள் செயற்படாமையாலேயே குருதி செல்லாத உறுப்புகள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஆனால், உடலுறவு ஒன்றின் மூலம் தான் இருபாலாரதும் எல்லா நரம்புகளும் செயற்படுகின்றன.

பாவரசர் கண்ணதாசன் ஒரு நூலில் மாதம் இருமுறை உடலுறவு வைத்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆணை வளைத்துப் போடப் பெண் பாவிக்கின்ற மருந்தும் இதுதான். உண்மை என்னவென்றால் அன்பு கட்டிப்போடுகிறது. உடலுறவோ அன்பைக் கூட்டுகிறது.

எனவே மணவாழ்க்கை சிறந்து விளங்க, நோயின்றி நீடூழி வாழ அகவை ஏறிய பின்னும் உடலுறவு தேவை என உணர்வோம்.
மேலதிக மதியுரைக்கு மருத்துவரை நாடவும்.

உள (மன) நோயை விரட்ட

அயலிலுள்ளவரின் நடத்தையைப் பாருங்கள். இயல்புநிலையைக் கடந்துவிட்டாரா? (அதாவது வழமைக்கு மாறான நடத்தையைக் கொண்டிருக்கிறாரா?) மாற்றாரை வெறுத்து ஒதுங்குகிறாரா? தனக்குள்ளே புலம்புகிறாரா? இயல்பாக, நலமாக வாழும் ஒருவருடன் ஒப்பிடுகையில் எத்தனை வேறுபாடுகள் தென்படுகிறது?

இவ்வாறனவர்களுக்கு வழமைக்கு மாறான நடத்தைகள் (Abnormal behavior) தொடங்குகிறது எனப் பொருள்படும். இதற்கு உளவியல் (மனோதத்துவ) மருத்துவரின் மதியுரையைப் பெறவும். அவரது மதியுரைப் படியே உள(மன)நல மதியுரைஞரை நாடலாம்.

முதலில் இவற்றைச் செய்து பாருங்கள்:-
இயல்புநிலைக்குக் குறித்த ஆளை வரவைக்க முயலுங்கள். அதாவது, அவரது விருப்புக்கு இணங்கி, அவரோடு அன்பாகப் பழகி, அவருடன் நல்லுறவைப் பேணி அணைத்துக் கொள்ளுங்கள். மேலும், பாதிப்புக்கள் தென்படின் குறித்த ஆளைப் புதிய சூழலுக்குள் உள்வாங்கவும். அதாவது, புதிய இடத்தில், புதிய உறவுகளுடன் பழகவிட்டு, தன்னம்பிக்கையை ஊட்டித் தனிமையில் வாழவிடாது தடுக்கவும்.

முடிவாகச் சொல்வதானால், குறித்த ஆளின் விருப்பம் ஈடேறுவதாலும் குறித்த ஆளின் விருப்புக்கேற்ற இடத்தில் வாழ இடமளிப்பதாலும் அந்த ஆளின் உள்ளத்தில் ஆழமாகப் (அடி/உள் மனத்தில்) பதிந்திருக்கும் உளப்பாதிப்புகளை ஏற்படுத்தும் தூண்டிகளை நினைவூட்டாமல் செய்யலாம். இதனால் குறித்த ஆளை வாட்டிய உள (மன) நோயை விரட்டலாம்.

பின்னால பார்த்து முடிவெடேன்

கம்பன்: அடிக்கடி எல்லாமே தோல்வி ஆகுதோ?

இளங்கோ: பெண்ணொருத்தியைப் பின்னால பார்த்து முடிவெடுத்தது தப்பாப் போச்சுதண்ணே!

கம்பன்: மூதேவியைப் பார்த்திட்டியள் போல… சீதேவியைப் பார்த்திருந்தால் நல்லாய் இருந்திருக்குமண்ணே…

இளங்கோ: எப்படியண்ணே… கண்டுபிடிச்சியள்…

கம்பன்: முன்னால பார்த்தால் அழகென்றால் – அவள்
சீதேவியாம்…
பின்னால பார்த்தால் அழகென்றால் – அவள்
மூதேவியாம்…
நான் சொல்லேல்ல
கண்ணதாசன் சொன்னானண்ணே….

இளங்கோ: பின்னால பார்த்து முடிவெடேன் என்றாய்
இப்ப
முன்னால பார்த்து முடிவெடேன் என்கிறாய்
எனக்கு எப்பனும் ஏறுதில்லையண்ணே!

கம்பன்: அழகிய பெண்ணொருத்தி பின்னே
அவளழகைப் பார்த்துச் சென்ற
ஆண் அடிபட்டு விழுந்தான்…
பின்னால வந்த மிதிவண்டிக்காரன்
இடித்துத் தான்
விழுந்தவனைக் கேட்டால்
முன்னால போன
அழகியின் பின்னழகைப் பார்த்து
பின்னால வந்தவனிட்டை
இடிவேண்டியதாய் கண்ணீர் வடித்தான்…
ஆனால்,
நீ எதை நினைத்துக் கண்ணீர் வடிக்கிறாய்?
நீங்க பெண்ணின் பின்னே பார்த்தியளோ
உங்க பின்னே எது நிகளுமெனப் பார்த்தியளோ
கண் முன்னே நடப்பதைப் பார்த்தியளோ
நாளைக்கு எது நடக்குமென
எண்ணிப் பார்த்தியளோ

இளங்கோ: என்னண்ணே
முன்னுகுப் பின்னுக்கென
பின்னுகிறீரண்ணே?

கம்பன்: மின்னலென வந்து போவது
முன்னண்ணே
எண்ணி எண்ணிப் பார்த்தால்
எத்துப்படுவது(தெரிவது)
பின்னண்ணே
நான்
இப்பவும் தான் சொல்கிறேன்
பின்னால பார்த்து முடிவெடேன்!

இளங்கோ: பிறகுமண்ணே
மின்னல் என்கிறியள்
எண்ணி என்கிறியள்
பிறகும் பின்னுகிறியளே!

கம்பன்: அடேய்! முட்டாள்
இன்றைக்கு இருப்பதைச் செலவழித்தால்
நாளைக்கு யாரிடம் கையேந்துவாய்?
இப்ப எப்படியாவது சமாளித்தால்
நாளைக்கு எப்பவாவது
சிக்கல் வந்தால் என்ன செய்வாய்?
முன்னுக்கு நிகழ்வது முடிந்த கதை
பின்னுக்கு நிகழ்வது தொடர் கதையாகாமல்
பின்னால பார்த்து முடிவெடேன்!

இளங்கோ: அப்ப
கண்ணால பின்னால
பார்க்காமலே
உண்ணான உள்ளத்தால
பின்னுக்கு ஏது நிகழுமென
எப்பன் எண்ணிப் பார்த்தே
முடிவெடுப்பது தானோ
“பின்னால பார்த்து முடிவெடேன்!” என்று
பின்னிப் பின்னிச் சொன்னியோ!

கம்பன்: இவ்வளவும்
கிள்ளிக் கிள்ளிச் சொன்ன
நான் தானண்ணே முட்டாள்!

இளங்கோ: என்னண்ணே அப்படிச் சொல்லிட்டியள்?

கம்பன்: இவ்வளவும் உனக்குச் சொல்ல முன் ஓர் எருமைக்குச் சொல்லியிருந்தால், அது எப்பவோ கண்டு பிடிச்சிருக்குமே!

இளங்கோ: எனக்கென்ன மூளையில்லையே!

கம்பன்: உனக்கென்ன மூளையிருந்தால் உடனே
கண்டுபிடிச்சிருப்பியே!

கண்ணதாசன்: நீங்க ஈராளும் பேசியதைக் கேட்டேன்
நாளும் நாமும்
உடனுக்குடன் பின்னுக்கு வருவதை
சுடச் சுட எண்ணியே
பின்னால பார்த்து முடிவெடுத்தாலே
முன்னாலே வெற்றி கொள்ளலாம்!

இளங்கோ, கம்பன் : நீங்க சொன்னால் சரியண்ணே!

தன்(சுய) மருத்துவம் தனக்குத் தேவையா?

நோய் ஒன்று வருமாயின் அதற்குப் பின்னாலே ஆயிரம் இருக்கும். அதனை அறியாமல் ஆச்சி சொன்னது, அப்பு சொன்னது, தம்பிக்கு இந்த மருந்து தான் கொடுத்தனாங்கள், தமிழ்வாணனின் ‘செலவில்லாத மருத்துவம்’ பொத்தகத்தில் இருந்தது என்றெல்லாம் எமக்கு நாமே மருத்துவம் செய்தால் உண்மையான நோயை எந்தக் கடவுள் கண்டு பிடிப்பார்?

உடலுக்குள்ளே என்ன என்று தெரியாமல், உடல் வெளிப்பாடுகளை வைத்து நோயைக் கண்டுபிடிக்க இயலாது. அக உந்தல் அல்லது புற உந்தல் அல்லது இரண்டாலும் நோய் வரலாம். ஒரு நோயைச் சுகப்படுத்தப் போய் பல நோய்களைச் சேகரித்தது போலவே தன்(சுய) மருத்துவத்தின் முடிவு அமையும்.

எனவே, நோய் வந்தால் மருத்துவரை நாடவும். நோயின் தோற்றம், நோயை விரட்டும் வழிகள், பக்க விளைவுகள் மற்றும் பின் விளைவுகள் அற்ற மருந்துகள், பாதுகாப்பு மதியுரை(ஆலோசனை) எனப் பலவற்றை அவரால் வழங்க முடியும்.

முக்கிய குறிப்பு : மருத்துவரை நாடினால் போதாது, மருத்துவருக்குப் பொய் சொல்லவும் கூடாது. மருத்துவருக்கு உண்மையைக் கூறினால், உங்கள் நோயை அவர் கண்டுபிடிக்க இலகுவாயிருக்கும் அல்லவா…!

முடிவு : நோயைக் குணமாக்க விரும்பும் அனைவரும் இதனைப் பின்பற்றவும் வேண்டும்!

நலமாக வாழ

உடற் தூய்மை என்பது
உடலைத் தேய்த்து நிராடி
அளவோடு உண்டு
நடந்து பயின்று
மகிழ்வோடு பழகி
உறுதியாய் இருத்தலே!
அப்படியாயின்
உளநோய் எப்படி?
கோபம், பொறாமை, எரிச்சல்
மட்டுமல்ல
தாழ்வான எண்ணம்
மாற்றாரை வீழ்த்தி முந்த நினைப்பது
இன்னும் எத்தனையோ இருந்தாலும்
நேர் விளைவு, பக்க விளைவு , பின் விளைவு
எல்லாவற்றையும் மறந்து
முடிவெடுப்பதால் கிடைக்கும் அறுவடையே
உளநோயின் தூண்டி!
உளநோயின் தூண்டிகளை
முளைவிடாமல் தடுத்தால்
நலமாக வாழலாமே!