திட்டமிட்டால் தானே மகிழ்வான வாழ்வு

ஆண், பெண் வேறுபாட்டை
அறிய முயன்ற அகவையிலே
வரவையும் செலவையும் மறந்தேன்!
இளமை துள்ளி விளையாடும் வேளை
எதிர்காலத்தை மறந்தேன்!
மணவாழ்க்கை அமைந்த வேளை
துணைவியைப் பார்த்தேனே தவிர
இணைந்து வாழும் வேளை தான்
வாழத் தேவையானதை
தேடிவைக்க மறந்ததை நினத்தேன்!
வாழ்க்கையில்
ஏதேதோ சந்தித்த வேளை
எதை எதையோ மறந்த பின்
முகம் கொடுக்கும் வேளை தான்
முழி பிதுங்கி நிற்கிறோமே!
இவ்வளவும் இருந்திருந்தால்
இப்படி நிகழுமென அறிந்திருந்தால்
நாம் எப்படியோ
மகிழ்வாக வாழ்ந்திருப்போமென
நினைப்பதை நிறுத்திவிட்டு,
நாளைக்கு
மகிழ்வாக வாழ்வதற்கு வேண்டியவற்றை
இன்றைக்கே
அழகாக ஒழுங்குபடுத்த
மறக்காமல் இருந்தால் போதாதா?
திட்டமிடலும் ஒழுங்குபடுத்தலும்
செயலாற்றலுக்குப் பக்கத்துணையே
நிறைவான செயலாற்றலே
மகிழ்வடையப் பக்கத்துணையே
மகிழ்வான வாழ்க்கையே
நெடுநாள் வாழ மருந்து!

2 responses to “திட்டமிட்டால் தானே மகிழ்வான வாழ்வு

  1. ”…மகிழ்வான வாழ்க்கையே
    நெடுநாள் வாழ மருந்து!…”
    இதைப் பலர் மறப்பதால் தான் பல தொல்லைகள்
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.