Category Archives: சிறு குறிப்புகள்

இரண்டடக்கேல்

விருப்பங்களை (ஆசைகளை) அடக்க முடியாமல் – நம்மாளுங்க
பெரும் விருப்பங்களை (பேராசைகளை) வளர்த்து – அதனை
அடைய முயன்றே கடைசியில் காண்பதோ – அதன்
அறுவடையாக (பின் விளைவாக) நமக்குக் கிட்டுவதோ
சோர்வும் (நட்டமும்) துயரமும் (துன்பமும்) தான் – அதனை
இரண்டடக்கேல் என நினைவூட்டுவதா?

இப்பதிவை முழுமையாகப் படிக்க எனது புதிய தளத்திற்கு வருகை தாருங்கள்.
இதோ இணைப்பு:-
http://www.ypvnpubs.com/2016/05/blog-post_13.html

Advertisements

புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05

http://www.ypvnpubs.com/

எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.
தூய தமிழ் பேணும் பணி
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
உளநலப் பேணுகைப் பணி
யாழ்பாவாணனின் எழுத்துகள்
யாழ்பாவாணன் வெளியீட்டகம்
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
இவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

http://www.ypvnpubs.com/

இப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.
இப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.
எனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.

http://www.ypvnpubs.com/

நடைபேசிகளும் நடைப்பிணங்களும்

நடைபேசிப் பாவனை அதிகம் ஆகிவிட்டது. ஆளுக்கு ஒன்றல்ல ஒன்றிற்கு மேற்பட்ட நடைபேசிகளைக் கையாளுகின்றனர். ஆயினும், நடைபேசிகளைக் கையாளும் ஒழுக்கநெறியைக் கவனத்தில் கொள்ளாது நம்மாளுகள் நடைபேசிகளைக் கையாளுவதால் தேவையற்ற உயிரிழப்புகளைச் சந்திக்கின்றனர்.

மேலுள்ள படம் தினகரன் செய்திப் பிரிவினரால் முகநூலில் வெளியிடப்பட்டது. அதனை நம்மாளுகள் விழிப்புணர்வு பெறும் நோக்கில் மீளப் பதிவு செய்கிறேன்.

மழைக்காலம், இடிமின்னல் வேளை நடைபேசிகளைக் கையாளும் போது இடிதாக்கி நம்மாளுகள் தேவையற்ற சாவைச் சந்திக்கின்றனர். இது பற்றிப் பலர் வழிகாட்டினாலும் கூட, எவரும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை.

நடைபேசிகளுக்கு மின்னைச் சேமிக்கும் (Charging) வேளை தொலைவில் உள்ள ஒருவருடன் நடைபேசி ஊடாகக் கதைக்கக் கூடாது என்பர். அதாவது, நடைபேசி வெப்பமேறுதல் அல்லது மின்னிணைப்பில் தீப்பற்றல் அல்லது வேறு காரணங்களால் நடைபேசி ஊடாகக் கதைப்பவர் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

அடடே!
மேலுள்ள படம்
எதனைச் சுட்டிக் காட்டுகிறது
இடது புறம்
மின்னேற்றி (Charger) எரிந்து கிடக்கிறது
நடுவே
அப்பிள் நடைபேசி வெடித்துக்கிடக்கிறது
வலது புறம்
நம்மாளு மூஞ்சி சிதறிக்கிடக்கிறது
இந்தப் படத்தை – என்
இல்லாளுக்குக் காட்ட
தலையைச் சுற்றுகிறது என்று ஒதுங்கினாள்
எனக்குக் கூட
உள்ளத்தைத் தாக்கிய படம் தான்
இந்தப் படத்தைப் பார்த்தாவது
நடைபேசிப் பேச்சாளர்கள் – தங்கள்
உயிரைக் காப்பாற்றுவார்களாயின் – அதுவே
இன்றைய தேவை என்பேன்!

இலத்திரனியல் கருவிகள் (தொலைக்காட்சி, வானொலி, கணினி, நடைபேசி) மட்டுமல்ல வேறெந்தக் கருவிகளைக் கையாள முற்பட்டாலும் அதனைக் கையாளும் வேளை பின்பற்றவேண்டிய வழிகாட்டலையும் மதியுரையையும் (ஆலோசனையையும்) கருத்திற்கொள்ளுமாறு பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.

ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு நாளும் எண்ணிப்பாருங்க…

இப்ப கொஞ்ச நாளாக நானும் வலைப்பூப் பக்கம் வாறது குறைவு. அந்த வகையில, எதிர்பாராத வேளை வலைப்பூப் பக்கம் வந்த நேரம்…”டேய்! யாழ்பாவாணா! நீங்களும் உங்க பதிவும்” என்று எழுதாமல் “அடப்போங்கப்பா…! நீங்களும் உங்க பதிவும்…!” என்று எல்லோர் உள்ளங்களையும் ஈர்த்த அறிஞர் திண்டுக்கல் தனபாலன் எழுதியதைப் படிக்க முடிந்தது.

நான் உளநல வழிகாட்டல் பதிவுகளை வழங்குகின்ற வேளை, அறிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் மெய்யியல் வழிகாட்டல் பதிவுகளை வழங்குகி வருகின்றார். அந்த வகையில, “அடப்போங்கப்பா…! நீங்களும் உங்க பதிவும்…!” என்ற பதிவு உளநல வழிகாட்டல் போன்று என் கண்ணைப் பறித்தது.

உண்மையில் உள (மன) மெய்யியலும் உடற்கூற்றியலும் கூடிப் பிறந்தது தான் இன்றைய அறிவியல் (விஞ்ஞான) உளவியல் என்கிறோம். அவ்வாறான ஒரு பதிவாகத் தான் அறிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு நூறு ரூபாத் தாளை வைத்து “தங்கத்துக்குக் கரி பூசினாலும் கழுவினால் கரி நழுவத் தங்கம் மின்னும்” என்றவாறு நமக்குக் கிட்டும் கெட்ட அறுவடையாலோ தோல்விகளாலோ இழப்புகளாலோ எமக்கான பெறுமதி குறையாது என்கிறார். அதாவது, தன்னம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் தங்கத்தைக் கழுவி மின்ன வைப்பது போல தமது அழுக்குகளைக் கழுவி மின்னலாம். நூறு ரூபாத் தாளுக்குள்ள பெறுமதி போல தங்கள் பெறுமதியை தாமே பேணி வெற்றி காண முன் வாருங்கள்.

மேலும், படிக்கும் வேளை “நேர்முகத் தேர்வுக்குப் போகும் மூத்தவனே, ஒழுங்காகக் கவனி…!” என்று பதினெட்டு வழிகாட்டலை கிள்ளிக் கிள்ளித் தருகின்றார். நாம் அள்ளி அள்ளிப் பொறுக்கலாம். அடுத்து நம்ம வெற்றிகளைத் தரும் பிள்ளையாரை ஒப்பிட்டு ஐந்து வழிகாட்டலை சுட்டிச் சொல்கின்றார். அடுத்துப் பட வெளியீட்டோடு ஓர் ஆய்வு செய்யெனத் தொட்டுக் காட்டுகின்றார். அப்பாலே நகர்ந்தால், எல்லாவற்றையும் மீட்டுப்பாரென மீளவும் ஆங்கிலத்தில பதினெட்டு வழிகாட்டலை அடுக்கி வைக்கின்றார்.

அப்பப்பா என்று அலுத்துக் கொள்ளாதீர்கள். அத்தனையும் சிறந்த வழிகாட்டல்களே! அத்தனை வழிகாட்டல்களையும் ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு நாளும் எண்ணிப்பாருங்க… உங்கள் வெற்றி உங்களை விட்டுப் பிரியாமல் உங்களுடனே ஒட்டிக்கொள்ளும்! சரி! வெற்றிகாண வேண்டுமா? கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பாரு!

http://dindiguldhanabalan.blogspot.com/2015/03/Internal-Audit.html

கண்ணீரும் தண்ணீரும் கண் கண்ட மருந்து!

நம்மாளுகள் அழுகின்ற வேளை வடிக்கின்ற கண்ணீரில் பல கழிவுப்பொருள் மட்டுமல்ல மருந்துப்பொருளும் இருக்கிறதாம். ஒரு கடகம் சின்ன வெங்காயம் அரிந்தால்/நறுக்கினால்/வெட்டினால் கண்ணில் படரும் படலத்தை நீக்கச் சத்திரசிகிச்சை செய்யத் தேவையில்லை என்று ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் எனக்குச் சொல்லியிருந்தார்.

எத்தனை சொட்டுக் கண்ணீர் வடிக்கிறீர்கள் என்றறிய ஒரு சின்ன வெங்காயத்தை உரித்தால் போதுமே! அப்படியாயின் ஒரு கடகம் சின்ன வெங்காயத்தை நறுக்கினால், நீங்கள் கண்ணீரால் குளித்து விடுவீர்களே! அந்தக் கண்ணீரில் கலந்திருக்கும் மருந்துப்பொருள் கண்ணில் படரும் படலத்தைக் கரைத்து விடுவதனால் சத்திரசிகிச்சை செய்யத் தேவையில்லை என அந்த மருத்துவரே விளக்கம் அளித்தார்.

நான் அழும் போது என் அழுகை நிறுத்த எவரும் எனக்கு உதவவில்லை. என்ர பிள்ளையை ஏன்டா அழுவிக்கிறியள் என்று ஆச்சி கேட்க, அழுதால் தான் நோய்கள் குணமடையுமென எனக்கடித்த சித்தப்பா விளக்கமளித்தார். அந்தக் காலத்தில கண்ணீரும் கண் கண்ட மருந்து என்று நானறியேன்.

இந்தக் காலத்தில மதியுரை நாடி வருவோர் அழுதழுது தங்கள் துயரைப் பகிரும் போது நானும் தடுப்பதில்லை. முழுத் துயரையும் கேட்டறிதல் எனது நோக்காயினும் முழுத் துயரையும் பகிருவதால், குறித்த ஆள் தனது உள்ளத்துச் சுமையை இறக்கி வைக்க முடிவதால் உள்ளத்தில் அமைதி கிட்டுமென்பது என் கருத்து. எனவே, அழுகையும் கண்ணீரும் நமக்கு மருந்தாகலாம்.

அழுகையும் கண்ணீரும் தொடர்ந்தால், நா வறண்டு தண்ணீர் விடாய்க்குமே! அப்படியாயின் நம்முடலுக்குத் தண்ணீரும் தேவை தானே! அடடே! தண்ணீரும் நா வறட்சி, உடல் வறட்சி போக்கும் கண் கண்ட மருந்து என்றே சொல்லலாம். நாம் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு ஆறு லீற்றர் தண்ணீர் குடித்து வந்தால் உடல் நலம் பேணலாம் என்கிறார்கள்.

விடிகாலை எழுந்ததும் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் உடல் குளிர்மையாக இருக்குமாம். நோய்கள் வர வாய்ப்புக் குறைவாம். மேலும், தண்ணீர்ச் சிகிச்சை (Water Therapy) பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள். அது பற்றி அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://tamilaarokyam.blogspot.com/2014/03/blog-post_86.html

மேலும், அறிஞர் புதுவை வேலு/யாதவன் அவர்கள் தனது வலைப்பூவில் “ஆரோக்கிய அமுதம் தண்ணீர்! தண்ணீர்!” என ஒரு பதிவைப் படைத்துள்ளார். அதனைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://kuzhalinnisai.blogspot.com/2015/03/blog-post_2.html

இனிய அன்புள்ளங்களே! கண்ணீரும் தண்ணீரும் கண் கண்ட மருந்து! அதற்காக அழவும் வேண்டாம், போக்குவரவு நேரத்தில், செயலகங்களில் சலம் (Urine) போகுமெனத் தண்ணீரும் குடிக்காமல் இருக்க வேண்டாம். பாவரசர் கண்ணதாசன் “இரண்டடக்கேல்” என்று சொல்லியிருக்கார். அதாவது மலம், சலம் போவதை அடக்காதீர் என்று பொருள். உண்ணுங்கள், குடியுங்கள் ஆனால் இரண்டடக்கேல் பேணுங்கள். அதுவே உளநலம் , உடல் நலம் பேண உதவும் என்பேன்.

கடலூர், வடலூரில் உளநல வழிகாட்டலும் மதியுரையும்

மதிப்புமிக்க, அன்புக்குரிய தமிழக உறவுகளே!
யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html
என்ற எனது பதிவை நீங்கள் படித்திருக்கலாம். அவ்வேளை உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) தேவைப்படுவோர் சந்திக்கும் வேளை அதற்கான தீர்வுகளை என்னால் வழங்க முடியும். அதாவது, தங்கள் உளநலம், உடல்நலம், குடும்பநலம் பேணுவதெப்படி என என்னுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

உங்கள் யாழ்பாவாணன் 02/02/2015 – 07/02/2015 வரை தமிழ்நண்பர்கள்.கொம் பதிவரும் நண்பருமான சுஷ்ரூவா அவர்களின் (இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூர்) இல்லத்தில் தங்கியிருப்பார். மேற்படி கருத்தாடலில் பங்குபற்றச் சந்திப்பு நாளை 04/02/2015 அன்று கீழ்வரும் நடைபேசி (Mobile) எண்ணுக்குத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தலாம்.
சுஷ்ரூவா – 091 087 54979451

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உண்மையா?

நான் உட்பட உண்மை இல்லை என்று சொல்லப் பலர் இருக்கலாம். ஆமாம்,
தமிழுக்கு முதல் நாள் என்றதும் புத்தாண்டுப் பிறப்பென்றதும் அன்றைய நாள் புதிய பயணத்தின் தொடக்க நாள் என்றதும் நல்லதோர் இலக்குக் குறித்து நன்நெறி வழியே செல்லும் வேளை வெற்றி கிட்டும் என்பது உண்மையே! இவ்வாறு நாம் இப்புனித நாளில் பயணம் செய்வோம்; வெற்றிகள் கிட்ட வழி பிறக்குமே!

புகைவண்டி இயந்திரம் நின்றுவிட்டால், தொடரும் பெட்டிகளும் நின்றுவிடும். அதற்காக முதல் நாள் செயற்திட்டம் நின்றுவிட்டால், தொடரும் செயற்திட்டமும் நின்றுவிடும் என்று பொருள் கொள்ளவேண்டாம். புகைவண்டி இயந்திரம் திருத்தப்பட்டால் பயணம் தொடருவது போல, முதல் நாள் செயற்திட்டம் திறம்பட இடம்பெற்றால் தொடரும் நாள்களிலும் வெற்றி கிட்டுமே!

முடிவாகச் சொல்வதாயின் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது உண்மை தான். நல்லதோர் இலக்குக் குறித்து நன்நெறி வழியே செல்லும் ஒவ்வொருவருக்கும் உண்மை தான். எனவே, 2015 தைப்பொங்கல் நாளில் இருந்து வாழ்வின் வெற்றிக்கான வழிகளில் பயணிக்க வாழ்த்துகிறேன்.