குழந்தைகளுக்கு வேண்டியவர் யார் தெரியுமா?!

இனிய உறவுகளே!

குழந்தைகளைப் பெற்ற பின், அவர்களை வளர்த்தெடுப்பதில் தான் நாம் அதிகம் அக்கறை காட்ட வேண்டும். அப்படி வளர்த்தெடுக்கும் வேளை பெற்றோர் அன்பைச் செலுத்தி வளர்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டாகக் குழந்தைகளின் விருப்பங்களுக்கு இணங்காது விட்டால், குழந்தைகள் அதனை அடையும் வரை அழலாம் அல்லது கோபம் கொண்டு எதையாவது தூக்கி எறியலாம் அதேவேளை எதையாவது அடித்து நொருக்கலாம்.

அவ்வேளை பெற்றோர் தமக்குக் கோபம் வராமல் தம்மைப் பேணுவதோடு; குழந்தைகளின் கோபத்தை அன்பால் தணிக்க முன்வரவேண்டும். குழந்தைகளின் நல்ல செயற்பாடுகளுக்கு ஊக்கமும் கொடுக்க வேண்டும்.

இத்தனையும் அறிஞர் ரஞ்சனி நாராயணன் அவர்களின் உளநல வழிகாட்டலைக் கருதிற்கொள்ள, கற்றுக்கொள்ளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

குழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?!.

via  குழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?!.

“குழந்தைகளுக்கு வேண்டியவர் யார் தெரியுமா?!” என்ற கேள்வியை உங்கள் முன் போட்டுடைத்த பின் பதிலைத் தராமல்; நான் எங்கேனும் பறக்க இயலாதே! ஆகையால், என் பதிலைத் தருகின்றேன். முரண்பட்டால் என் மீது சொல் எறியலாம்.

குழந்தைகளின் செயலைக் கண்டு பெற்றோர் கோபம் அடைந்தால், குழந்தைகளுக்கு அடித்துப் பயமுறுத்தலாம். அச்செயல் குழந்தைகளின் உள்ளத்தை விட்டு நீங்குமா? இல்லை! ஆகையால் குழந்தைகள் பெற்றோரை எதிரியாகத் தான் பார்ப்பர். அதனால், குழந்தைகளுக்குப் பெற்றோர் மீது வெறுப்பு ஏற்படாலாம்.

குழந்தைகளின் செயலைக் கண்டு பெற்றோர் அன்பு காட்டி, சிரிக்க வைத்து, அவர்களை அள்ளி அணைக்க வேண்டும். அச்செயல் குழந்தைகளின் உள்ளத்தை விட்டு நீங்குமா? இல்லை! ஆகையால் குழந்தைகள் பெற்றோரை அன்பானவர்களென ஏற்றுப் பதிலுக்கு அன்பை வெளிப்படுத்துவர். அதனால், குழந்தைகளுக்குப் பெற்றோர் மீது அன்பு தான் அதிகரிக்கும்.

அப்படியாயின், குழந்தைகளுக்கு வேண்டியவர் யார் தெரியுமா?!
குழந்தைகள் மீது அன்பு காட்டும் உள்ளங்களே, குழந்தைகளுக்கு வேண்டியவர் ஆகின்றனர்.

4 responses to “குழந்தைகளுக்கு வேண்டியவர் யார் தெரியுமா?!

  1. அருமையான எடுத்துக்காட்டு ஐயா!

  2. இப்போதான் என் பதினாறு வயது மகனிடம் ,’பைக்’கை எடுக்க வேண்டாமென்று சொல்லியும் ஸ்டார்ட் செய்தான் ,அவனை தடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது .வெறுப்பு ஏற்படாமல் தடுப்பது சிரமமாகயுள்ளது !

    • பெற்றோர்கள் நாம் என்றால் பிள்ளைகளின் செயலைக் கண்டு, கொஞ்சம் பொறுமையைப் பேண முயற்சி செய்யவேண்டும்.