ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு நாளும் எண்ணிப்பாருங்க…

இப்ப கொஞ்ச நாளாக நானும் வலைப்பூப் பக்கம் வாறது குறைவு. அந்த வகையில, எதிர்பாராத வேளை வலைப்பூப் பக்கம் வந்த நேரம்…”டேய்! யாழ்பாவாணா! நீங்களும் உங்க பதிவும்” என்று எழுதாமல் “அடப்போங்கப்பா…! நீங்களும் உங்க பதிவும்…!” என்று எல்லோர் உள்ளங்களையும் ஈர்த்த அறிஞர் திண்டுக்கல் தனபாலன் எழுதியதைப் படிக்க முடிந்தது.

நான் உளநல வழிகாட்டல் பதிவுகளை வழங்குகின்ற வேளை, அறிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் மெய்யியல் வழிகாட்டல் பதிவுகளை வழங்குகி வருகின்றார். அந்த வகையில, “அடப்போங்கப்பா…! நீங்களும் உங்க பதிவும்…!” என்ற பதிவு உளநல வழிகாட்டல் போன்று என் கண்ணைப் பறித்தது.

உண்மையில் உள (மன) மெய்யியலும் உடற்கூற்றியலும் கூடிப் பிறந்தது தான் இன்றைய அறிவியல் (விஞ்ஞான) உளவியல் என்கிறோம். அவ்வாறான ஒரு பதிவாகத் தான் அறிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு நூறு ரூபாத் தாளை வைத்து “தங்கத்துக்குக் கரி பூசினாலும் கழுவினால் கரி நழுவத் தங்கம் மின்னும்” என்றவாறு நமக்குக் கிட்டும் கெட்ட அறுவடையாலோ தோல்விகளாலோ இழப்புகளாலோ எமக்கான பெறுமதி குறையாது என்கிறார். அதாவது, தன்னம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் தங்கத்தைக் கழுவி மின்ன வைப்பது போல தமது அழுக்குகளைக் கழுவி மின்னலாம். நூறு ரூபாத் தாளுக்குள்ள பெறுமதி போல தங்கள் பெறுமதியை தாமே பேணி வெற்றி காண முன் வாருங்கள்.

மேலும், படிக்கும் வேளை “நேர்முகத் தேர்வுக்குப் போகும் மூத்தவனே, ஒழுங்காகக் கவனி…!” என்று பதினெட்டு வழிகாட்டலை கிள்ளிக் கிள்ளித் தருகின்றார். நாம் அள்ளி அள்ளிப் பொறுக்கலாம். அடுத்து நம்ம வெற்றிகளைத் தரும் பிள்ளையாரை ஒப்பிட்டு ஐந்து வழிகாட்டலை சுட்டிச் சொல்கின்றார். அடுத்துப் பட வெளியீட்டோடு ஓர் ஆய்வு செய்யெனத் தொட்டுக் காட்டுகின்றார். அப்பாலே நகர்ந்தால், எல்லாவற்றையும் மீட்டுப்பாரென மீளவும் ஆங்கிலத்தில பதினெட்டு வழிகாட்டலை அடுக்கி வைக்கின்றார்.

அப்பப்பா என்று அலுத்துக் கொள்ளாதீர்கள். அத்தனையும் சிறந்த வழிகாட்டல்களே! அத்தனை வழிகாட்டல்களையும் ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு நாளும் எண்ணிப்பாருங்க… உங்கள் வெற்றி உங்களை விட்டுப் பிரியாமல் உங்களுடனே ஒட்டிக்கொள்ளும்! சரி! வெற்றிகாண வேண்டுமா? கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பாரு!

http://dindiguldhanabalan.blogspot.com/2015/03/Internal-Audit.html

Advertisements

10 responses to “ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு நாளும் எண்ணிப்பாருங்க…

  1. நண்பர் டி.டி. அவர்களின் பதிவைப்பாராட்டி தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே…. வாழ்க வளமுடன்.
    – கில்லர்ஜி

  2. மெய்யியல் வழிகாட்டல் பதிவுகளை…..
    unmai….arumai Pathivu….
    Thank you for you also.

  3. டிடி இப்போதெல்லாம் சிறப்பாக எழுதுகிறார்

  4. தங்களுக்கு வாழ்த்தும் நன்றியும்…………..