தலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு?

சென்ற பதிவில் பாலியல் (Sex) நோக்கில் மணமுறிவு (divorce) ஏற்படுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனைப் படித்த பின் இதனைப் படித்தால் பயனடையலாம் என நம்புகிறேன்.
மணமுறிவு வேண்டாமா? வேண்டுமா?

மேற்காணும் பதிவில் “ஐயம்!” என்ற தலைப்பின் கீழ் முறையற்ற உறவு பற்றிய எண்ணங்களும் மணமுறிவு (divorce) இற்கு வழிவிடலாம் எனத் தொட்டுக்காட்டியிருந்தேன். அதனால், “தலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு?” என்று எழுதலாம் என முன்வந்தேன்.

மக்களாய (சமூக) த்தில் ஒருவனுக்கு ஓருவள் என்ற ஒழுங்கை மீறுபவர்களைக் கீழ்த்தரமானவர்கள் என்று கணிக்கப்படுகிறது. அதேவேளை உடல்நலம் பற்றி எண்ணும் போது உயிர்கொல்லி (Aids) நோய் ஏற்பட இடமுண்டு என எச்சரிக்கை செய்யப்படுகிறது. ஆயினும் குடும்பநலம் பற்றி எண்ணும் போது மணமுறிவு (divorce) ஏற்பட இடமுண்டு என எச்சரிக்கை செய்யப்படுகிறது. இவற்றை எல்லாம் மீறி முறையற்ற உறவு வைத்துக்கொள்வோரைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

எந்தெந்தச் சூழலில் முறையற்ற உறவு மேற்கொள்ள வழிகிட்டும் என அலசுவது அழகல்ல. ஆயினும், பாலுணர்வு மேலீட்டால் இருபாலாருமே முறையற்ற உறவில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது. அது பற்றி அலசுவதும் அழகல்ல. ஆயினும், முறையற்ற உறவால் ஏற்படும் பின்விளைவை அலசுவது அழகாகவே இருக்கும்.

பெரும்பாலும் முறையற்ற உறவில் ஈடுபடுவோர் பாலுணர்வு மேலீட்டால் பின்விளைவை எண்ணமாட்டார்கள்; அகப்பட்ட ஆளோடு முறையற்ற உறவில் ஈடுபடுவதால் பாலியல் நோய்கள் (sexual decease) ஏற்பட இடமுண்டு. தொடக்கத்தில் பாலியல் உறுப்புகளில் கடி, சொறி, புண் என எதுவும் வரலாம். அப்படி ஏற்பட்டதும் மதிப்புக் குறைந்துவிடுமென அஞ்சி மருத்துவரை நாடாது இருப்பது பாலியல் நோய்கள் முற்றிச் சாவையே தரும்! அதேவேளை சாவையே தரும் உயிர்கொல்லி (Aids) நோய் ஏற்படவும் முறையற்ற உறவு இடமளிக்கிறதே!

பெண்களுக்கு மாதமொரு தடவை மாதவிடாய் வட்டம் ஏற்படும். அதுபற்றியறிய மாதவிடாய் (http://ta.wikipedia.org/s/ivw) என்ற இணைப்பைச் சொடுக்குக. அக்காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அதுகூட முறையற்ற உறவு என்றே கூறலாம். அதாவது, பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறும் கழிவுச் செந்நீர் (குருதி) ஆணுறுப்பிற்குத் தொற்று ஏற்படுத்துவதால் பாலியல் நோய்கள் (sexual decease) வர வாய்ப்புண்டு. அதாவது, மனைவியைத் தவிரப் பிறர் தமது மாதவிடாய்க் கால நாள்களைத் தெரிவிக்க மாட்டார்கள். மனைவியைத் தவிரப் பிறருடன் உறவைப் பேணும் வேளை இச்சிக்கல் ஏற்படலாம்.

மனைவி ஓருவளே உண்மையைச் சொல்லக்கூடியவள். அதனால், மாதவிடாய்க் கால நாளிற்கு இரண்டு முன்று நாள் முன்னிருந்து மாதவிடாய் வந்து ஏழு நாள் வரையான பத்து நாள்கள் உடலுறவைப் பேணாது பாதுகாப்பு எடுக்கலாம். அதேவேளை மனைவியும் தானும் உடலைச் சுத்தமாகப் பேணி உடலுறவைப் பேணலாமே! ஒருவனுக்கு ஓருவள் என்ற ஒழுங்கைப் பேணினால் தலை போகின்ற பாலியல் நோய்கள் (sexual decease) வர வாய்ப்பிருக்காதே! எனவே, மனைவியை விலக்கி வைத்துவிட்டுப் பிறருடன் முறையற்ற உறவு வைத்திருந்தால் தலை போவதைத் / சாவதைத் தடுக்க இயலுமா?

Advertisements

8 responses to “தலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு?

  1. சமூக நலன் வேண்டி தங்களின் பதிவு அறியப்பட வேண்டிய விடயங்கள்.

  2. காமம் கண்ணை மறைத்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம்தான் 🙂

  3. உங்கள் கருத்தும், நோக்கமும் சரியானது. தொடருங்கள்!

  4. மண் தின்ற உடம்மை மனிதன் தின்னட்டுமே என்ற பரந்த அமெரிக்க கலாச்சாரத்தில்தானே ஆட் கொல்லி நோயை உண்டுபண்ணி உலகம் கொடையாக கொடுத்துள்ளார்கள். .