சிக்கலுக்கான எனது தீர்வுகள்

சிக்கல் (பிரச்சனை) என்று வந்துவிட்டால்
சிக்கலை (பிரச்சனையை) உண்டாக்குவோரும்
சிக்கலுக்கு (பிரச்சனைக்கு) உள்ளாகுவோரும்
சந்திப்பதைக் கண்டிருப்பியளே!

இவ்விரு பகுதியினரில்
ஒரு பகுதி அமைதி பேணினால்
மறுபகுதி நிறுத்துவதைக் கண்டிருப்பியளே!

இவ்விரு பகுதியினரில்
இவ்விரு பகுதியினருமே மோதிக்கொண்டால்
தீர்வின்றித் தொடருவதைக் கண்டிருப்பியளே!

சிக்கலைச் சிக்கலாக எடுத்தால் தானே
சிக்கல் என்பார்கள்
சிக்கலைப் படிப்பாகக் கருதினால் தானே
தீர்வினைக் கற்பார்கள்
சிக்கலுக்குத் தீர்வு தேடும் போதே
இப்படியும் இருக்கென்பதைக் கண்டியளோ!

அமைதி வலுத்தால் தீர்வு கிட்டும்
மோதல் வலுத்தால் தீர்வு கிட்டாதே
இதுவே எனது தீர்வு கண்டியளோ!

இந்த
என் தீர்வுக்குப் பெறுமதியில்லைக் காணும்
அந்த வள்ளுவர்
“எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு. (467)” என்று
சொன்னாரே – அந்தத்
தீர்வே பெறுமதியானது என்பேன்!

குறிப்பு: சிக்கல் (பிரச்சனை) வந்த பின் எண்ணுவதை விட ஒவ்வொரு செயலிலும் இறங்கு முன் சிக்கல் (பிரச்சனை) வந்துவிடாமல் எண்ணிக்கொள்வதே எனது தீர்வாகும். இதற்குச் சரியாக முடிவெடுக்கப் பழகுங்கள்.
https://mhcd7.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81/

4 responses to “சிக்கலுக்கான எனது தீர்வுகள்

 1. ”..சிக்கலைச் சிக்கலாக எடுத்தால் தானே
  சிக்கல் என்பார்கள்
  சிக்கலைப் படிப்பாகக் கருதினால் தானே
  தீர்வினைக் கற்பார்கள்…”’
  நல்ல ஆய்வு சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்:

 2. செயல்களில் பொதுதானே சிக்கலா? இல்லையா ? என்று தெரியவரும்…………