2015 இலும் முதற் கோணல் முற்றும் கோணலா?

2015 பிறந்தாச்சு! இனியாவது வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்குமா?

இத்தனை நாளும் எடுத்த அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிய “முதற் கோணல் முற்றும் கோணல்” என்று மாற்றார் சொல்வதைக் கேட்டுப் பின்வாங்குவது சரியா?

என்னைப் பொறுத்த வரையில் பிழை என்பேன். முதற் கோணல் என்பது முதலாம் செயல் பிழைத்தமை அல்ல, எதனால் பிழை வருமென்பதை அறிந்து செயற்படாது இருந்தமையே! அப்படியாயின் முற்றும் கோணல் என்பது முதற் கோணல் சரி செய்யப்படாது தொடரும் எச்செயலும் வலுவிழந்த ஒன்றே!

2015 இலும் முதற் கோணல் முற்றும் கோணலா? என்றால் இல்லை என்று தொடருங்கள். எப்படித் தொடருவதா? முதற் கோணல் சரி செய்யப்பட்டால்; எதைத் தொடர்ந்தாலும் எதிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிட்டுமே!

பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, தவறுகள் சரி செய்யப்பட்டு, தடைகள் அடையாளம் காணப்பட்டு, இலக்கை அடைவதற்கான ஒழுங்கோடு இறங்கினால் முதற் கோணலும் முற்றும் கோணலும் பொய்யென்று உணர முடியும்.

8 responses to “2015 இலும் முதற் கோணல் முற்றும் கோணலா?

 1. பயனுள்ள கருத்து
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
   மிக்க நன்றி.

 2. மனம் கோணல் இல்லாவிட்டால் போதும்;எந்தக்கோணலையும் சரி செய்து விடலாம்.
  புத்தாண்டு வாழ்த்துகள்

  • தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
   மிக்க நன்றி.

 3. வணக்கம்
  அருமையாக சொல்லியுள்ளீர்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  • தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
   மிக்க நன்றி.

 4. பயனுள்ள பதிவு. தொஅடரட்டும் பணி! இனிய உலகளாவிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  • தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
   மிக்க நன்றி.