விலைப்பெண் (வேசி) ஆக வேண்டாம்!

ஒவ்வொரு விலைப்பெண்(வேசி) இற்குப் பின்னாலும் உலகளவு துயரக்கதைகள் இருக்கும் என்பதைக் கருத்திற் கொண்டே பொறுமையாக இதனைத் தொடர்ந்து படிக்க வேண்டும்.

சிலரைச் சிலர் போரில் கடத்திச் சென்று படையினரின் (இராணுவத்தின்) பசிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் (குறிப்பாக இலங்கையில்). சிலரைக் கடத்திச் சென்று இத்தொழிலுக்கு சிலரால் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் குறிப்பாக மும்பையில் பிற மாநிலத்தினரைக் கடத்திச் சென்று பாவிக்கின்றனர். சீனாவிலிருந்து தொழில் தருவதாகக் கூறி பெண்களை வேறு நாடுகளுக்கு இழுத்து இத்தொழிலைத் திணிப்பதாகப் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இவ்வாறு வெளிநாடுகளிலும் இடம்பெறுகிறது.

இவ்வாறான பாதிப்புக்குள்ளனவர்கள் தப்பித்து உலகம் போற்றும் சிறந்த பெண்களாக வாழ்பவர்களும் கண் முன்னே இருக்கிறார்கள்.
உயிர் வாழ ஏதுமற்றவர்கள் கூட தமது வறுமையைப் போக்க இத்தொழிலை நாடுகிறார்கள். இவர்களால் வேறு தொழிலைத் தேடிப் பெற்றிருக்கலாம். சிலர் நண்பர்களோடு பொழுதுபோக்காகத் தொடங்கி வாழ்நாள் தொழிலாக மாற்றியுள்ளாரகள். இன்னும் எத்தனையோ பெண்கள் இத்தொழில் ஈடுபடுகிறார்கள்.

இவர்களது அழகும் இளமையும் கெட்டுப் போகத் தொழில் கட்டாய ஓய்வுக்குத் தள்ளி விட மக்களாயத்தால் (சமூகத்தால்) கழித்து ஓரம்போக்க தற்கொலையோடு வாழ்வை முடிக்கிறார்கள். ஏனையோர் உயிர்கொல்லி நோயால் (Aids) சாவைத் தழுவுகிறார்கள். கத்தி தூக்கியவனுக்கு கத்தியால்த் தான் சாவு என்பது போல இத்தொழிலுக்குள் நுழைந்தவர்களுக்கு இத்தொழிலாலேயே சாவு என்பதற்கு மாற்றுக்கருத்துக் கிடையாது.

கடத்திச் செல்லப்பட்டோ படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டோ இத்தொழிலுக்குள் சிக்கி வெளியே வந்து மற்றவர்களைப் போல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவர்களை நாம் வாழ்த்த வேண்டும். இவ்வாறு ஏனையோரும் இயல்புக்குத் திரும்ப நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நட்பு, பொழுதுபோக்கு நிகழ்வு எனச் சென்று தவறு செய்தவர்கள் கூடத் திருந்தி வாழ்கிறார்கள். மக்கள் மத்தியில் இரண்டாம் நிலை மதிப்போடுதான் வாழ்ந்தாலும் தன்னம்பிக்கையோடு வாழ்வதைப் பாராட்ட வேண்டும். ஏனையோருக்கு இவர்களது வாழ்க்கை படிப்பினையாகட்டும்.

வறுமை, தொழிலின்மை எனப் பல சாட்டுகள் கூறி இத்தொழிலை நாடுபவர்களைச் சுட்டுத்தள்ள வேண்டும். அதாவது மன்னிக்கவே கூடாது. இவர்கள் முயற்சி எடுத்திருந்தால் எத்தனையோ தொழிலைச் செய்திருக்கலாம்.

ஆண்கள் செய்யவேண்டிய கட்டடத் தொழிலில் பெண்கள்
ஆண்கள்; செய்யவேண்டிய மீன்பிடித் தொழிலில் பெண்கள்
ஆண்கள் செய்யவேணடிய தென்னை, பனை ஏறிக் கள் பறிப்பதில் பெண்கள்
ஆண்கள் செய்யவேண்டிய ஊர்தி ஓட்டுநர் தொழிலில் பெண்கள்

ஆண்கள் செய்கின்ற எல்லாத் தொழிற்றுறையிலும் பெண்களிருக்க விலைப் பெண்களாக (வேசியாக) தொழிலில் ஈடுபடுவதை ஏற்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. அவர்கள் தங்களுக்குள் தன்னம்பிக்கை வளர்த்து தம்மால் மாற்றார் பாதிக்கக் கூடாதென உணர்ந்து மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே எனபதற்கு இணங்க இளசுகளைச் சீரழிக்காமல் நாட்டை மேம்படுத்த விலைப்பெண் (வேசி) ஆக வேண்டாம்.

6 responses to “விலைப்பெண் (வேசி) ஆக வேண்டாம்!

  1. தங்களது கோபம் நியாயமானதே,,, நண்பரே…

  2. சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து தொழில் செய்யலாம் ,இப்படி சுய’ தொழில்’ செய்வது கேவலமானதுதான் !

  3. எனக்குள் ஒரு கேள்வி ..ஆண்கள் வேசித் தொழிலை செய்வதில்லையா…??

    • ஆண்களும் அரிதாக ஈடுபடுகிறார்கள்; அவர்களைத் தேடிப் பெண்களும் அலைகிறார்கள். இப்பதிவு இருபாலாருக்கும் சாட்டை அடியே!
      மிக்க நன்றி.