எதற்கெல்லாம் இதெல்லாம் வேண்டாம்!

wishes

மேலுள்ள படம் எவரோ ஒருவரால் முகநூலில் பகிரப்பட்டிருந்தது. நண்பர்கள் எதற்கெல்லாம் “வா மச்சி சரக்கு (மது/அற்ககோல்) அடிக்கலாம்” என்று அழைப்பதை படம் சுட்டிக் காட்டுகிறது. எதற்கெல்லாம் இதெல்லாம் வேண்டாம் நண்பர்களே! நண்பர்களே எப்போதும் சரக்குப் (மது/அற்ககோல்) பக்கம் போனால் சிறுநீரகம் அழுகிச் சாவு வந்துவிடலாம் என்றே சொல்லாவிட்டாலும் சாவடைந்தவர்களின் பெறுபேறுகள் அப்படித்தான் சொல்ல வைக்கிறதே!

இந்த அட்டவணையைப் பாருங்க… வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் அம்மா பிள்ளைக்குச் சொல்வதும் அப்பா பிள்ளைக்குச் சொல்வதும் வேறுபடுவது அவரவர் உள்ளம் வெளிப்படுத்தும் உண்மையே! அதாவது, அம்மா அன்பின் வெளிப்பாடாகவும் அப்பா ஆளுமையின் வெளிப்பாடாகவும் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். பிள்ளைகளாகிய நாம் தான் நம் நிலை, நமது சூழலின் பார்வை என்பவற்றோடு அவர்களின் கருத்தை ஒப்பிட்டுப் பொருட்படுத்த வேண்டும். பெற்றோர்களின் உள்ளத்தில் இருந்து வெளிப்படுவது பெறுமதிமிக்க எண்ணங்களே!

இளையவர்களிடையே (இருபாலாரிடமும்) எதற்கெடுத்தாலும் மகிழ்வூட்டும் நிகழ்வை (பார்ட்டி) ஒழுங்குபடுத்துவது வழக்கமாயிற்று. சற்று நேர மகிழ்வூட்டல் பெரும் சறுக்கலுக்கு இடமளிக்கலாம். சற்று நேர மகிழ்வூட்டல் சிறந்த வழிகாட்டலைத் தரப்போவதுமில்லை. எதற்கெல்லாம் இதெல்லாம் (“வா மச்சி சரக்கு (மது/அற்ககோல்) அடிக்கலாம்”) வேண்டாம்! வெற்றி பெற்றால் இனிப்பைக் கொடுத்து மகிழ்வைப் பகிருங்கள்; அதேவேளை எவ்வாறு அவ்வெற்றியை பேணுவது பற்றி எண்ணமிடுங்கள். தோல்வி பெற்றால் அழுதழுது துயரைப் பகிராமல் வெற்றி பெறுவதெப்படி என எண்ணமிடுங்கள். வெற்றியையும் தோல்வியையும் முகங்கொடுக்கப் பழகுங்கள்; அவை பிறப்பிலிருந்து இறப்புவரை தொடருமே!

Advertisements

4 responses to “எதற்கெல்லாம் இதெல்லாம் வேண்டாம்!

  1. ”..வெற்றியையும் தோல்வியையும் முகங்கொடுக்கப் பழகுங்கள்; அவை பிறப்பிலிருந்து இறப்புவரை தொடருமே!….
    mikanalla advice..Thodaraddum..
    Vetha.Elangathilakm.

  2. அற்புதமான கருத்தை முன்வைத்துள்ளீர்கள் நண்பரே…