அடுத்தவர் மதியுரை உனக்கு எதற்கு?

நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை
கல்லும் முள்ளும்
மேடும் பள்ளமும்
இருந்திருக்கும்…
நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை தடவை
விழுந்திருப்பாய்
எழுந்திருப்பாய்
விழுந்தும் எழும்ப முடியாமல்
இருந்தும் இருப்பாய்…
நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை
படித்திருப்பாய்
பட்டறிந்திருப்பாய்
கண்டுபிடித்திருப்பாய்
அத்தனையும் நினைவில் உருளுமே…
நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை
அறிந்திருந்தாய்
நீ மீட்டுப் பார்த்திருந்தால்
அத்தனை அத்தனை
அறிவும்
உனக்கு வழிகாட்டும் போது
அடுத்தவர் மதியுரை உனக்கு எதற்கு?

4 responses to “அடுத்தவர் மதியுரை உனக்கு எதற்கு?

 1. ”..அத்தனை
  அறிவும்
  உனக்கு வழிகாட்டும் போது
  அடுத்தவர் மதியுரை உனக்கு எதற்கு?…”’
  ஆம் சொந்த புத்தியே சுயபுத்தி.
  நல்லுரை. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

 2. தன்னம்பிக்கையான வார்த்தைகள்