உள்ளத்தைப் பேணுவோம்

பழசு எல்லாம்
மீட்டுப் பார்க்காத வரை
நினைவில் உருளாது
ஆனால்
மூளையில் பதியப்பட்டது
அழிவதும் இல்லையே!
பழசை நினைத்தால்
உளநோய் வருமாயின்
பழசுகளை நினைவூட்டாத இடத்தை
நாடுவதே நலம்!
புதிதாகத் தொடங்கும் எதற்கும்
உளநோய் வரமாட்டாதெனின்
பழசுகளை நினைவூட்டினால்
கற்றுக் கொண்ட பாடங்கள்
வழிகாட்டுமே!
பழசுகளைக் கிளறினால்
சிலருக்கு உளநோய்
சிலருக்கு வழிகாட்டல்
இதெல்லாம்
தமக்கு ஏற்பட்ட
பாதிப்பின் வேறுபாடே!
பழசுகளை நினைவூட்டாத இடத்தை
நாடமுடியாதோர்
பழசை நினைத்தால் வரும்
உளநோயைக் கட்டுப்படுத்த முடியாதோ?
பழசுகளை
மீட்டுப் பார்த்தாலும் கூட
உளநோய் வராமல் வாழ
உளப் பாதிப்பைத் தரும்
எதனையும் பொருட்படுத்தாதே!
பிறர் உள்ளத்தைத் தாக்காமல்
இருந்தால் தானே
பிறரால் நம்முள்ளம்
தாக்குதலுக்கு உள்ளாகாமலே இருக்க
நாம்
நலமாக வாழ முடிகிறதே!
உள்ளத்தைப் பேணுவோம் என்பது
நம்முடையதை மட்டுமல்ல
பிறருடைய உள்ளத்தையும்
புண் படாமல் பேணவும் வேண்டுமே!

 

2 responses to “உள்ளத்தைப் பேணுவோம்

  1. ”..உள்ளத்தைப் பேணுவோம் என்பது
    நம்முடையதை மட்டுமல்ல
    பிறருடைய உள்ளத்தையும்
    புண் படாமல் பேணவும் வேண்டுமே!..” உண்மையே. ஏற்க முடிகிறது.
    வேதா. இலங்காதிலகம்.