சேமிப்பில் பங்கெடுக்க வேண்டியவர் யார்?

இனிய குடும்பத்தின் மகிழ்ச்சி என்பது சேமிப்பில் உள்ள இருப்பில் (பணம், பொன், பொருள்) தான் தங்கியுள்ளது. அப்படியாயின் சேமிப்பில் பங்கெடுக்க வேண்டியவர் யார்?

இல்லத் தலைவன் (கணவன்)
இல்லத் தலைவி (மனைவி)
இருவரும் இணைந்து

ஒரு கேள்விக்கு மூன்று விடைகள் வந்ததேன்? அப்படியாயின் மூன்று விடைகளும் சரியானவையே! ஆயினும், குடும்பத்தின் மகிழ்ச்சி என்பது இல்லத் தலைவனிலோ இல்லத் தலைவியிலோ தங்கியிருக்க முடியாது. எனவே, மூன்றாவது விடையே சரியானது எனலாம்.

இளமை
பூத்துக் குலுங்கும் அகவையிலே
பாலியல் உணர்வலைகள்
மோதிக்கொள்ளும் வேளையிலே
நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை)
தாமாக ஓடிப் போய்க் கூடியோ
தாமாகக் கூடிப் பின் ஓடியோ
குடும்ப வாழ்வில் இறங்கு முன்
சேமிப்புப் பற்றிச் சிந்திக்காமையால்
சீரழிந்து போகின்றனரே!

என்றொரு எண்ணம் என்னில் மோத மேற்படி வரிகளை எழுதினேன். நொடிப் பொழுதுப் பாலியல் சுகம் குடும்பத்தின் மகிழ்ச்சி அல்ல. ஆண்டுக்கு 24×365 மணி நேரச் சுகமான வாழ்வே குடும்ப மகிழ்ச்சி எனலாம். ஓராண்டுக்கான 24×365 மணி நேரச் சுகமான வாழ்விற்கு வேண்டிய பொருண்மிய நிலை (வருவாய் அல்லது சேமிப்பு) தேவை என்பதை நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை) படித்திருந்தால் சீரழியத் தேவையில்லை.

எனவே, முதல்ல படிப்பு அடுத்து நல்ல உழைப்பு அடுத்துப் போதிய சேமிப்பு, அடுத்துக் காதல் அல்லது திருமணம் அடுத்துப் பாலியல் தேர்வு, பிள்ளை குட்டிகள் அடுத்துக் குழந்தை வளர்ப்பு என நீளும் குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது பொருண்மிய நிலை (வருவாய் அல்லது சேமிப்பு) என்பதை நம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை) படித்திருக்க வேண்டுமென மதியுரை கூறும் பெரியோர்கள் தங்கள் குடும்ப நிலையை இவ்வாறு பேணுகிறார்களா? அவர்களும் சேமிப்பில் பங்கெடுக்க வேண்டுமே! முதுமை நெருங்கினால் தொழிலின்றி வருவாயின்றி இருக்கையில் கைகொடுப்பது சேமிப்பு மட்டுமே!

4 responses to “சேமிப்பில் பங்கெடுக்க வேண்டியவர் யார்?

 1. மிக அருமையான பதிவு! <>!!
  பள்ளிப் பிராயத்திலிருந்தே சேமிப்பின் அவசியத்தையும், சேமிக்கும் வழிகளையும் கற்பிக்க வேண்டும்.

 2. வணக்கம் யாழ்ப்பாவாணன் !

  இருமனத்தின் இன்பமிருக் கின்றசெல்வ மென்று
  குருபுத்தி யாய்சொன்ன கூற்று !

  அழகாய் சொல்லிட்டீங்க வருங்காலம் ஏற்று நடக்கட்டும்

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்