மனிதருக்குள்ளே உள்ள வேற்றுமைகளை விரட்ட

சாதி, மதம், இனம், ஊர், நாடு என பல வேற்றுமைகளை மனிதருக்குள்ளே பார்க்கமுடிகிறது. இதனை விரட்டி ஒற்றுமை பேணினால் எல்லோருக்கும் நன்மை உண்டு.
1.எல்லோரும் கடவுளின் படைப்பாகக் கருதுவோம்.
2. எல்லோரும் சேங்குருதிச் சாதியென அன்பு காட்டுவோம்.
3.நம்மைப் போல மாற்றானும் என அணைப்போம்.
4.பலனை எதிர்பாராது உதவுவோம். உதவுவதால் உறவைப் பேணலாம்.
5.பிறர் உதவியைப் பணிவோடு ஏற்போம். அதனால், உறவு வலுவடையும்.
6.எந்தவொரு வேறுபாட்டையும் மறந்து புதிய உறவுகளை ஏற்படுத்துவோம்.
7.உள்ள உறவுகளைப் பகைக்காமல் பேணுவோம்

“ஆயிரம் நண்பர்களை (ஆண்/பெண்) உருவாக்கலாம். ஆனால், ஓர் எதிரியை உருவாக்கிவிடாதே!” என்று பாவரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். நம்மைச் சூழ அன்பால் இணையும் கூட்டம் அமைய வேண்டும். அதற்கு நாம் தான் அன்பைப் பரிசாக வழங்க வேண்டும். அப்ப தான் எதிரி உருவாக வாய்ப்பிருக்காது. அடுத்தது நம்பிக்கையைப் பேண வேண்டும். பிறர் மத்தியில் நாம் நம்பிக்கையை விதைக்காமல்; பிறரிடம் எப்படி நம்பிக்கையை அறுவடை செய்யலாம்?

முடிவாகப் பாகுபாடுகள், வேறுபாடுகளை உள்ளத்தில் இருத்தாமல் பிறர் மத்தியில் அன்பை, நம்பிக்கையை விதைத்தால் மனிதருக்குள்ளே உள்ள வேற்றுமைகளை விரட்ட வழி பிறக்கும். இதனைப் பிறரிடம் எதிர்பார்க்காமல், நாமே பிறரிடம் ஏற்படுத்த வேண்டும். இன்றே நாம் ஒவ்வொருவரும் இப்புனித முயற்சியில் இறங்குவோம்.

Advertisements

4 responses to “மனிதருக்குள்ளே உள்ள வேற்றுமைகளை விரட்ட

  1. சொல்வது எளிதும் செய்வது கடினமுமாகலாம்
    வேதா. இலங்காதிலகம்.

  2. ஒவ்வொரு மனிதனும் இதை பேணிகாத்தால் உலகில் சாதியும், மதமும் அழிந்துவிடும் என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லியுள்ளீர்கள் ஐயா அருமையான பதிவு.