படிப்பில் வெற்றி பெற

கண்ட கண்ட
அழகிகளைக் கண்டாலும்
காதல் ஆகாமல்
வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏதும்
காதில் விழுத்தாமல், கண்ணில் படாமல்
கண்ட கண்ட பொத்தகங்களில்
பார்வையை விழுத்திப் படித்தேன்
மருத்துவரானேன் என
படித்தவன் ஒருவன் சொல்கிறான்!
கண்ட கண்ட
பொடியளோட பழகாமலும்
காதல் ஆகாமலும் ஒதுங்கியே
தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சி ஏதும்
கண்ணில் படாமலும் காதில் விழுத்தாமலும்
சமையற்கூடம்
எட்டிப் பார்க்காமலும்
வைத்த கண் வாங்காமல்
பொத்தகங்களைப் படித்தேன்
பொறியலாளரானேன் என
படித்தவள் ஒருவள் சொல்கிறாள்!
என்ர பிள்ளை குட்டிகளுக்கு
படி படியென்று – நான்
எத்தனை எத்தனை
படித்தவன், படித்தவள் கதை சொல்லியும்
படிக்கிறதக் கண்டதில்லையே!
உண்மையிலேயே
தாங்களாகவே உணர்ந்து படித்தால் தானே
படிப்பு வருமென்று
என்ர அப்பன்
எனக்குரைத்ததைத் தானே
மீட்டுப் பார்க்க முடிகிறதே!

 

2 responses to “படிப்பில் வெற்றி பெற

  1. good…..why you are writting talking thamil….
    Vetha.Elangathilakam.