பிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது.

மணமுடிக்கிறோம்… பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறோம்… அவ்வளவுடன் குடும்ப வாழ்வு முற்றுப் பெறவில்லை. பெற்ற பிள்ளைகளைப் படித்தோராகாவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யக் கூடியவராகவும் வளர்த்து ஆளாக்குவதிலேயே மணவாழ்வின் வெற்றியைக் காணலாம்.

பிறந்த குழந்தையின் உள்ளம் எதுவுமே எழுதப்படாத ஏட்டைப் போன்றது. பிறந்த பின் வளர வளரக் குழந்தையின் உள்ளத்தில் பதிவுகள் எழுதப்படுகிறது. வளரும் குழந்தை நல்லெண்ணங்களைத் திரட்டிக் கொள்ளத்தக்கதாக “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்” என்றவாறு குழந்தையை வளர்க்க வேண்டும்.

குழந்தைகளின் நடத்தையை வைத்தே எல்லோரும் எடைபோடுவார்கள். குழந்தையின் உள்ளத்தில் இருப்பதே நடத்தையாக வெளிப்படுகிறது. குழந்தைகளின் நடத்தையை வைத்துப் பெற்றோர்களையும் அடையாளம் (நல்ல குழந்தையாயின் பெற்றோர் நன்றாக வளர்த்திருக்கிறார்கள் என்றும் கெட்ட குழந்தையாயின் பெற்றோர் வளர்ப்புச் சரியில்லை என்றும்) காணலாம்.

ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும் நல்லெண்ணங்களை விதைத்தால் அவர்களது நடத்தைகளில் நல்ல அறுவடைகளைப் பெறலாம். மேலும், குழந்தைகளை நல்ல சூழலில் வைத்து வளர்க்க வேண்டும். அவ்வேளை சூழலில் இருந்து குழந்தை நல்லவற்றை உள்வாங்க இடமுண்டு.

குழந்தையின் உள்ளத்தில் விதைக்கப்பட்ட எண்ணங்கள் தான் எதிர்காலத்தில் அக்குழந்தை சிறந்தவராக உருவாக வழிவிடுகிறது. எனவே, பிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது நல்லறிஞர்களாக உருவாக அன்பு, அறிவு, ஒழுக்கம் என நல்னவெல்லாம் ஊட்டப்படவேண்டும்.

அந்த வகையில் “உங்கள் குழந்தைகள் நல் ஒழுக்கமாக, புத்திசாலியாக வளர” என்ற பதிவை அந்திமாலை தளத்தில் கண்டேன். அதில் பதினைந்து வழிகாட்டல்கள் காணப்படுகிறது. அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://anthimaalai.blogspot.com/2014/05/blog-post_3053.html

4 responses to “பிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது.

 1. வணக்கம்

  அறிவுக்கு விருந்தாகும் பதிவு.. நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. கடந்த 29.05.2014 அன்று உங்கள் ‘அந்திமாலையில்’ வெளியாகிய “உங்கள் குழந்தைகள் நல் ஒழுக்கமாக, புத்திசாலியாக வளர” என்ற வழிகாட்டுக் கட்டுரையை நண்பர் ஜீவலிங்கம் காசிரஜலிங்கம் அவர்கள் mhcd7.wordpress இணையத்தில் இணைத்திருந்தார். அதன் ஊடாகப் பல வாசகர்கள் எமது இணையத்திற்கு வந்து பார்வையிட்டிருந்தனர். ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பை உருவாக்குவற்கும், வெளியிடுவதற்கும், விளம்பரப் படுத்துவதற்கும் நேரப் பற்றாக்குறையால் அவதியுறும் இந்தப் பரபரப்பு நிறைந்த உலகில் இன்னொரு இணையத்தில் வெளியாகும் ஆக்கம் பலரையும் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் செயற்பட்ட நண்பர் ஜீவலிங்கம் காசிரஜலிங்கம் அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றிகள். மேற்படி எமது ஆக்கத்திற்கு இணையத்தில் கருத்துரைத்த, மற்றும் பாராட்டிய அனைவருக்கும் எமது நன்றிகள்.

  “ஒன்றுபட்டு உயர்வோம்”
  மிக்க அன்புடன்
  இ.சொ.லிங்கதாசன்
  ஆசிரியர்
  அந்திமாலை இணையம்
  http://www.anthimaalai.dk