வாழ்க்கையின் வெற்றிக்குச் சில

வாழ்க்கை என்பது வழுக்கி விழுத்தும் சேற்று நிலத்தின் மேல் நடப்பது போல் இருக்கும். நாம் தான் விழுத்துவிடாமல் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும். வாழ்க்கை என்பது எவராலும் சொல்லிக் கொடுக்க முடியாது. நாம் தான் வாழ்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நல்லுறவுகளைப் பேணுதலே முதற்பாடமாக இருக்கும். முதற் சந்திப்பில் முதல் வெளிப்பாட்டில் நல்லறவு மலரும் என்கிறார்கள். அதாவது உங்களது முதல் வெளிப்பாட்டை உங்களை முதலில் சந்தித்தவர் விரும்புவார் ஆயின் உறவு வலுக்கும்.

உளவியல் நோக்கில் பார்த்தால் விருப்பங்களும் வெறுப்புகளும் உள்ளத்தில் பதிந்து விடுகிறது. அதனால் தான் விருப்பங்களுக்கான ஆள்களின் உறவுகள் தொடர, வெறுப்புகளுக்கான ஆள்களின் உறவுகள் முறிவடைகிறது. எனவே, அடுத்தவர் எம்மை விரும்பும் வகையில் எமது சொல், செயல் அமையுமாயின் நல்லுறவுகள் தானாகவே அமையும். வாழ்க்கையின் வெற்றிக்கு நல்லுறவுகளின் எண்ணிக்கையே முதலீடு.

நல்லுறவுகளின் எண்ணிக்கையைப் பெருக்க எமது சொல், செயல் மீது பிறர் நாட்டம் இருக்க வேண்டும். தொன்னூற்றொன்பது விளுக்காடு பிறரது நாட்டம் நற்கருத்துகள், நற்பண்புகள், நற்செயல்கள் என்பவற்றிலேயே இருக்கும். எனவே, நல்லுறவுகளின் எண்ணிக்கையைப் பெருக்க நற்கருத்துகள், நற்பண்புகள், நற்செயல்கள் யாவும் உங்கள் சொல், செயல் இரண்டிலும் மின்ன வேண்டும். அதேவேளை கெட்ட எண்ணங்களோடு நாடுவோரை இனங்கண்டு விலக்கிக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்” என்ற பதிவை அந்திமாலை தளத்தில் படித்தேன். அவற்றைக் கையாளும் போது நல்லுறவுகளை பேணுவதோடு வாழ்க்கையின் வெற்றிக்கே செல்ல வாய்ப்பும் உண்டு. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அவற்றைப் படித்துக் கையாளவும்.

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

6 responses to “வாழ்க்கையின் வெற்றிக்குச் சில

 1. வாழ்க்கையின் வெற்றிக்குச் சில
  வழிகாட்டிகள் பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

 2. எமது தளத்தில் வெளியாகிய “வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்” என்ற பதிவை mhcd7.wordpress.com இணையத்தில் இணைத்து அறிமுகம் செய்த நண்பர் ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

  “ஒன்றுபட்டு உயர்வோம்”

  மிக்க அன்புடன்
  ஆசிரியர்
  அந்திமாலை இணையம்
  டென்மார்க்.
  http://www.anthimaalai.dk

  • “ஒன்றுபட்டு உயர்வோம்” என்பதே என் விருப்பமாகும்.
   பலருக்கு நன்மை தரும் அறிஞர்களின் பதிவுகளைப் பகிருவதில் எல்லோருக்கும் நன்மையே!
   மிக்க நன்றி ஐயா!

 3. வணக்கம்

  சிறப்பாக உள்ளது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-