உன்னை நீ அறி

கவலைப்படாதே!
வாழ்க்கையில் தோல்விகள்
உன்னைத் தொடருவதாய் எண்ணி…
துன்பப்படாதே!
வாழ்க்கையில் தொல்லைகள்
உன்னைத் தாக்குவதாய் எண்ணி…
வெந்துவிடாதே!
வாழ்க்கையில் சோர்வுகள்
உன்னைத் குடைவதாய் எண்ணி…
அழுதுவிடாதே!
வாழ்க்கையில் வலிகள்
உன்னைத் குத்துவதாய் எண்ணி…
கோபப்படாதே!
மாற்றார் மதியுரைகள்
உனக்குப் பயனில்லையென எண்ணி…
சிந்திக்க மறக்காதே!
உன்னையே நீ அறியாமல்
எல்லாமே எதிரியென எண்ணி…
உணர மறுக்காதே!
நம்பிக்கை இருந்தால்
எல்லாம் உன்னையே நாடுமென்பதை…
முன்னேறப் பின்வாங்காதே!
கூப்பிடு தூரத்திலே வெற்றிகள்
உனக்காகத் தான்
காத்திருக்கிறது என்பதை மறக்காமல்….
தன்னம்பிக்கையை வளர்த்திடு!
உலகையே
உருட்டி விடக்கூடிய பலம்
உனக்குள்ளிருந்தே ஊற்றெடுப்பதை
நீயே அறிவாய்…!

Advertisements

2 responses to “உன்னை நீ அறி

  1. ”..தன்னம்பிக்கையை வளர்த்திடு!
    உலகையே
    உருட்டி விடக்கூடிய பலம்
    உனக்குள்ளிருந்தே ஊற்றெடுப்பதை
    நீயே அறிவாய்…!..

    ஆம்!….உண்மையே உண்மை…
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.