மனிதா சாவைக் கூப்பிடலாமா?

தொற்றுக் கிருமிகள் மலிந்த
பொது மலசல கூடங்களில்
சுவாசிப்பதால்
சூழலிலுள்ள நஞ்சு/தொற்றுக் கிருமிகள்
உடலினுள்ளே செல்கிறதை அறிவாயா!
பொது மலசல கூடங்களில்
மலத்தை விட, சலத்தை விட
வெண்சுருட்டு(சிகரெட்) மீதியும்(பில்ரர்)
மதுபானக் குடுவைகளும்(போத்தல்களும்)
நிரம்பிக் கிடப்பதைப் பார்க்கிறியா!
நிக்கோடின் நஞ்சும் அற்ககோல் நஞ்சும்
உடலுக்குக் கேடு
அதேவேளை
சுகாதார மற்ற இடங்களில்
சுவாசிப்பதும் கேடு
மொத்தத்தில்
மனிதா சாவைக் கூப்பிடலாமா?
வாழ்க்கையிலே
புகைத்தலையும் மது குடித்தலையும்
பிறர் பெண்ணோடு கூடுவதையும்
நிறுத்தினால் தான்
சாவையே விரட்டலாம் மனிதா!

2 responses to “மனிதா சாவைக் கூப்பிடலாமா?

 1. ”…புகைத்தலையும் மது குடித்தலையும்
  பிறர் பெண்ணோடு கூடுவதையும்
  நிறுத்தினால் தான்
  சாவையே விரட்டலாம் மனிதா!…”’
  GOOD!…
  Vetha.Elangathilakam.