சில மணித்துளிகள் நேரத்தில்…

கோபம் (ஆத்திரம்) வந்து விட்டால்
மூளைக்குச் செந்நீர் (குருதி) செல்லாதே – அந்த
சில மணித்துளிகள் நேரத்தில் – நம்ம
ஆளுகள் போடும் கூத்துத் தரும்
பெரும் பாதிப்புகளை எண்ணிப் பாரும்!
தற்கொலை எண்ணம் இருக்கே – அது
சில மணித்துளிகள் வரை
ஆட்டம் போடும் – அதை
கடந்து விட்டால் வாழ்வு தான்!
ஆமாம்,
தற்கொலை எண்ணம் கொண்டோரை
அடையாளம் கண்டுவிட்டால் – அந்த
சில மணித்துளிகள் நேரத்தில் – அவருக்கு
முறையாக வழிகாட்டத் தவறினால்
சாவைத் தான் பார்க்க முடியுமே!

குறிப்பு: சில மணித்துளிகள் நேரத்தில் முறையாக எண்ணமிட்டுச் சரியான வழியைத் தெரிவு செய்வதன் மூலமே கோபம் (ஆத்திரம்), தற்கொலை இரண்டிலிருந்தும் விடுதலை பெறலாம்.

2 responses to “சில மணித்துளிகள் நேரத்தில்…

  1. வணக்கம்

    உண்மையான அறிவுரை மிக்க வரிகள்… பகிர்வுக்கு வாழத்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-