நீ நீயாகவே இரு

அப்பனும் ஆத்தாளும்
ஊட்டி, உறுக்கி வளர்த்துவிட்டது
தங்கட பிள்ளை
நீ என்று நினைத்துக் கூட அல்ல…
நீ நீயாகவே இருந்தால்
உனக்கென்று ஓர் அடையாளம்
இருக்குமென்று தான்!
உன்னை
அடித்து நொறுக்கிப் படிப்பித்தது
தங்கட வயிற்றுப் பசியை
பின்னாளில் – நீ
போக்குவாய் என்றெண்ணியல்ல…
நீ நீயாகவே இருந்தால்
உனக்கென்று ஓர் அடையாளம்
இருக்குமென்று தான்!
நீ உன்னையறிந்தால்
உன்னுடைய
அப்பன், ஆத்தாளை நினைத்தால்
நீ நீயாகவே இருந்தால்
உனது
அடையாளம் நன்றாயிருந்தால்
ஊருக்குள்ள நீதான் பெரியாள்!
உன் நிலையை மறந்து
அடுத்தவரை நம்பிக் கெட்டு
உன் பலத்தை வலுப்படுத்தாமல்
நீ நீயாகவே இன்றி
மாற்றானின் நிழலாக மாறினால்
ஊரே உன்னை மதிக்காது!
உனக்கென்று
ஒரு சுய பலத்தை உருவாக்கி
நன்மதிப்பை
உன் அடையாளமாக்கி
நடை போட முயன்று பார்…
ஊரும் உலகும்
உன்னைப் போற்றும்
அப்பதான்டா
உன் அப்பனும் ஆத்தாளும்
மகிழ்வடைவார்களடா…
அதற்காகவேனும்
நீ நீயாகவே இரு!

4 responses to “நீ நீயாகவே இரு

 1. வணக்கம்
  அண்ணா.

  ஒவ்வொரு வரிகளும் உண்மைதான்….. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. பிள்ளைக்கு அருமையாய் அறிவுரை சொன்னீர்கள் !
  நம்ம பேட்டை பக்கம் தலயை காட்டுங்க …http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html
  பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்!