வாழ்க்கைக் கணக்கு

பிறந்தவன் இறப்பது வழமை…
உருவான பொருள்களும்
ஒரு நாள் அழிவது இயல்பு…
உழைத்தால் ஈட்டலாம் வருவாய்…
சோர்வாய்க் கிடந்தால்
இருப்பதெல்லாம் விற்று முடிய
பிச்சை எடுக்கலாம் போங்கள்…
இது தான்
பாட்டி சொல்லும் உள்ளக் கணக்கு!
இழப்புகளையும் சோர்வுகளையும்
செலவில் பதிவு செய்தும்
வருவாயும் தேட்டமும்
வரவில் பதிவு செய்தும்
வரவளவு செலவைக் கணித்து
வாழ்ந்தாலும் கூட
உடல் வலுவற்ற வேளை
பயனீட்டச் சேமிப்பிலும் வைத்து
வாழ்வதே வாழ்க்கைக் கணக்கு!
உள்ளக் கணக்கும் வாழ்க்கைக் கணக்கும்
முறையாக் கற்று வாழ்பவரே
எல்லாவற்றிலும் வெற்றியீட்டுவர்!

2 responses to “வாழ்க்கைக் கணக்கு

 1. ”…உள்ளக் கணக்கும் வாழ்க்கைக் கணக்கும்
  முறையாக் கற்று வாழ்பவரே
  எல்லாவற்றிலும் வெற்றியீட்டுவர்!…””
  இதுவே உண்மையான கணக்கு.
  இனிய பாராட்டு.
  வேதா. இலங்காதிலகம்.