நீரிழிவும் ஆணுறுப்பு இயங்காமையும்

நண்பர் ஒருவர் தனது ஆணுறுப்புச் சோர்வாகவும் கையடிக்கவோ மனைவியோட உடலுறவு கொள்ளவோ ஒத்துழைக்காமல் இயங்க மறுப்பதாகவும் எனக்குச் சொன்னார். இதனால், உள்ளம் நொந்து தனது துயரை என்னுடன் பகிர நேர்ந்ததாகவும் அந்நண்பர் சொன்னார்.

எனக்குத் தெரிந்த (ஒன்றாகப் பள்ளியில் படித்த) தோழி கண்ணகியிடம் நண்பரை அழைத்துச் சென்றேன். அவளும் நண்பரை கையை நீட்டென்றாள்; ஊசி ஒன்றை மோதிர விரல் நுனியில் குத்தினாள்; கருவி ஒன்றில் வடிந்த செந்நீரை (குருதியை) நனைத்தாள்; முன்னூற்றி எண்பதில நிற்குது என்றாள்.


நண்பரோ எதுவும் தெரியாத அப்பாவியாக இருந்தான். எனக்கோ தோழி எதற்காக இதெல்லாம் செய்கிறாள் என்று புரியவில்லை. நமக்குள்ளே “என்னத்துக்கடா என்னத்துக்கடா” என்று ஆளைஆள் பார்த்துக் கேட்டவேளை, தோழியே உண்மை உடைத்து வைத்தாள்.

“செந்நீரில் (குருதியில்) குளுக்கோசின் அளவு அதிகரித்து இருப்பின் நீரிழிவு நோய் என்று சொல்வார்கள். இது உடலில் உள்ள இன்சுலின் சுரப்பு சுரக்கப்படாமையால் ஏற்படுகிறது. இது நேரடியாக எதுவும் செய்யாது.

ஆனால் பாலுணர்வைத் தடுத்தல், கண்ணை மறைத்தல், கைகால் விறைப்பு ,உடற் கலங்களை உருவாக விடாமல் தடுத்தல், வேகமாகச் செந்நீர் (குருதி) செல்லவிடாமல் தடுத்தல் என உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு முக்கிய ஊக்கியாக நீரிழிவு செயற்படுகிறது.

பாவற்காயைப் பிழிந்து நாளுக்கு ஒரு முறை ஒரு முடர் (வாய்)குடிக்கலாம். சிறு குறிஞ்சான் இலையை நறுக்கிச் சம்பல் போட்டுச் சாப்பிடலாம். வியர்வை வெளியேறக் கால் மணி நேரம் நாள்தோறும் பயிற்சி செய்யலாம். இனிப்புச் சேர்ந்த எதனையும் உண்பதோ குடிப்பதோ தவிர்க்க வேண்டும்.

எப்படியிருப்பினும் நீரிழிவு நோய் இருப்பது கண்டிறியப்பட்டதும் குறித்த நோயாளி மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பது நல்லது. ஆகையால், அடிக்கடி வந்து செந்நீர் (குருதி) சோதனை செய்யுங்கள். விரைவில் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.” என்று தோழி விளக்கமளித்தாள்,

“எல்லாம் சரி தோழி, நண்பரின் நிலைக்குக் காரணம் என்ன?” என்று நானும் கேட்டேன். “நாடி, நாளங்களில் வேகமாகச் செந்நீர் (குருதி) செல்லாமையால் ஆணுறுப்பு விறைப்படையாது காணப்படுகிறது” என்று தோழியும் பதிலைத் தந்தாள்.

மூன்று வேளையும் ஒவ்வொரு குளிகை போடுமாறு கொஞ்ச வெள்ளைக் குளிகைகளைத் தந்து மூன்று நாளைக்குப் பின் வரச் சொன்ன தோழி, மேற்காணும் வழிகாட்டலையும் பின்பற்றுமாறு சொல்லி வைத்தாள்.

 

Advertisements

6 responses to “நீரிழிவும் ஆணுறுப்பு இயங்காமையும்

  1. நண்பனுக்கு தெளிவாக நல்ல உதவி செய்தீர்கள்

  2. நல்ல உதவி செஞ்சிருக்கீங்க…

    உங்க பின்புல படத்தை மாற்றுங்கள். எழுத்துகளை வாசிக்க இயலவில்லை. மிகவும் கடினமாக உள்ளது…

  3. இப்போ நல்லா வருது அண்ணா… முன்னர் முழாசா லோட் ஆகல போல…