அகவை ஏறிய (வயது போன) பின்னும் உடலுறவா?

மணமுடித்து நான்கு பிள்ளைகளும் ஆன பிறகு உறவுக்காக அழைப்பது சரியில்லை என முட்டி மோதும் குடும்பத்தினருக்காக, மணமுடித்துப் பிள்ளைகளே பிறக்காது என்ற பிறகும் உறவுக்காக அழைப்பது சரியில்லை என முட்டி மோதும் குடும்பத்தினருக்காக, அகவை ஏறிய பின்னும் உடலுறவு தேவை என்பதைக் குறிப்பிடுகிறேன்.

சிரிக்கின்ற போதும் அழுகின்ற போதும் மட்டுமல்ல எமது ஒவ்வொரு செயலிலும் குறித்த எண்ணிக்கை நரம்புகளே செயற்படுகின்றன. நரம்புகள் செயற்படாமையாலேயே குருதி செல்லாத உறுப்புகள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஆனால், உடலுறவு ஒன்றின் மூலம் தான் இருபாலாரதும் எல்லா நரம்புகளும் செயற்படுகின்றன.

பாவரசர் கண்ணதாசன் ஒரு நூலில் மாதம் இருமுறை உடலுறவு வைத்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆணை வளைத்துப் போடப் பெண் பாவிக்கின்ற மருந்தும் இதுதான். உண்மை என்னவென்றால் அன்பு கட்டிப்போடுகிறது. உடலுறவோ அன்பைக் கூட்டுகிறது.

எனவே மணவாழ்க்கை சிறந்து விளங்க, நோயின்றி நீடூழி வாழ அகவை ஏறிய பின்னும் உடலுறவு தேவை என உணர்வோம்.
மேலதிக மதியுரைக்கு மருத்துவரை நாடவும்.

2 responses to “அகவை ஏறிய (வயது போன) பின்னும் உடலுறவா?

  1. மணவாழ்க்கை சிறந்து விளங்க, நோயின்றி நீடூழி வாழ அகவை ஏறிய பின்னும் உடலுறவு தேவை//சரியாகச் சொன்னீர்கள் ஆனால் இதை தவறென்று நினைப்பதுதான் தவறு .உடல் ஆரோக்கியமாக இருக்க கழிவுகளை வெளியே கழிப்பது நல்லது.அது ஆரோகியத்துக்கு நல்லது.பதிவுக்கு பாராட்டுக்கள்