பின்னால பார்த்து முடிவெடேன்

கம்பன்: அடிக்கடி எல்லாமே தோல்வி ஆகுதோ?

இளங்கோ: பெண்ணொருத்தியைப் பின்னால பார்த்து முடிவெடுத்தது தப்பாப் போச்சுதண்ணே!

கம்பன்: மூதேவியைப் பார்த்திட்டியள் போல… சீதேவியைப் பார்த்திருந்தால் நல்லாய் இருந்திருக்குமண்ணே…

இளங்கோ: எப்படியண்ணே… கண்டுபிடிச்சியள்…

கம்பன்: முன்னால பார்த்தால் அழகென்றால் – அவள்
சீதேவியாம்…
பின்னால பார்த்தால் அழகென்றால் – அவள்
மூதேவியாம்…
நான் சொல்லேல்ல
கண்ணதாசன் சொன்னானண்ணே….

இளங்கோ: பின்னால பார்த்து முடிவெடேன் என்றாய்
இப்ப
முன்னால பார்த்து முடிவெடேன் என்கிறாய்
எனக்கு எப்பனும் ஏறுதில்லையண்ணே!

கம்பன்: அழகிய பெண்ணொருத்தி பின்னே
அவளழகைப் பார்த்துச் சென்ற
ஆண் அடிபட்டு விழுந்தான்…
பின்னால வந்த மிதிவண்டிக்காரன்
இடித்துத் தான்
விழுந்தவனைக் கேட்டால்
முன்னால போன
அழகியின் பின்னழகைப் பார்த்து
பின்னால வந்தவனிட்டை
இடிவேண்டியதாய் கண்ணீர் வடித்தான்…
ஆனால்,
நீ எதை நினைத்துக் கண்ணீர் வடிக்கிறாய்?
நீங்க பெண்ணின் பின்னே பார்த்தியளோ
உங்க பின்னே எது நிகளுமெனப் பார்த்தியளோ
கண் முன்னே நடப்பதைப் பார்த்தியளோ
நாளைக்கு எது நடக்குமென
எண்ணிப் பார்த்தியளோ

இளங்கோ: என்னண்ணே
முன்னுகுப் பின்னுக்கென
பின்னுகிறீரண்ணே?

கம்பன்: மின்னலென வந்து போவது
முன்னண்ணே
எண்ணி எண்ணிப் பார்த்தால்
எத்துப்படுவது(தெரிவது)
பின்னண்ணே
நான்
இப்பவும் தான் சொல்கிறேன்
பின்னால பார்த்து முடிவெடேன்!

இளங்கோ: பிறகுமண்ணே
மின்னல் என்கிறியள்
எண்ணி என்கிறியள்
பிறகும் பின்னுகிறியளே!

கம்பன்: அடேய்! முட்டாள்
இன்றைக்கு இருப்பதைச் செலவழித்தால்
நாளைக்கு யாரிடம் கையேந்துவாய்?
இப்ப எப்படியாவது சமாளித்தால்
நாளைக்கு எப்பவாவது
சிக்கல் வந்தால் என்ன செய்வாய்?
முன்னுக்கு நிகழ்வது முடிந்த கதை
பின்னுக்கு நிகழ்வது தொடர் கதையாகாமல்
பின்னால பார்த்து முடிவெடேன்!

இளங்கோ: அப்ப
கண்ணால பின்னால
பார்க்காமலே
உண்ணான உள்ளத்தால
பின்னுக்கு ஏது நிகழுமென
எப்பன் எண்ணிப் பார்த்தே
முடிவெடுப்பது தானோ
“பின்னால பார்த்து முடிவெடேன்!” என்று
பின்னிப் பின்னிச் சொன்னியோ!

கம்பன்: இவ்வளவும்
கிள்ளிக் கிள்ளிச் சொன்ன
நான் தானண்ணே முட்டாள்!

இளங்கோ: என்னண்ணே அப்படிச் சொல்லிட்டியள்?

கம்பன்: இவ்வளவும் உனக்குச் சொல்ல முன் ஓர் எருமைக்குச் சொல்லியிருந்தால், அது எப்பவோ கண்டு பிடிச்சிருக்குமே!

இளங்கோ: எனக்கென்ன மூளையில்லையே!

கம்பன்: உனக்கென்ன மூளையிருந்தால் உடனே
கண்டுபிடிச்சிருப்பியே!

கண்ணதாசன்: நீங்க ஈராளும் பேசியதைக் கேட்டேன்
நாளும் நாமும்
உடனுக்குடன் பின்னுக்கு வருவதை
சுடச் சுட எண்ணியே
பின்னால பார்த்து முடிவெடுத்தாலே
முன்னாலே வெற்றி கொள்ளலாம்!

இளங்கோ, கம்பன் : நீங்க சொன்னால் சரியண்ணே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.