தன்(சுய) மருத்துவம் தனக்குத் தேவையா?

நோய் ஒன்று வருமாயின் அதற்குப் பின்னாலே ஆயிரம் இருக்கும். அதனை அறியாமல் ஆச்சி சொன்னது, அப்பு சொன்னது, தம்பிக்கு இந்த மருந்து தான் கொடுத்தனாங்கள், தமிழ்வாணனின் ‘செலவில்லாத மருத்துவம்’ பொத்தகத்தில் இருந்தது என்றெல்லாம் எமக்கு நாமே மருத்துவம் செய்தால் உண்மையான நோயை எந்தக் கடவுள் கண்டு பிடிப்பார்?

உடலுக்குள்ளே என்ன என்று தெரியாமல், உடல் வெளிப்பாடுகளை வைத்து நோயைக் கண்டுபிடிக்க இயலாது. அக உந்தல் அல்லது புற உந்தல் அல்லது இரண்டாலும் நோய் வரலாம். ஒரு நோயைச் சுகப்படுத்தப் போய் பல நோய்களைச் சேகரித்தது போலவே தன்(சுய) மருத்துவத்தின் முடிவு அமையும்.

எனவே, நோய் வந்தால் மருத்துவரை நாடவும். நோயின் தோற்றம், நோயை விரட்டும் வழிகள், பக்க விளைவுகள் மற்றும் பின் விளைவுகள் அற்ற மருந்துகள், பாதுகாப்பு மதியுரை(ஆலோசனை) எனப் பலவற்றை அவரால் வழங்க முடியும்.

முக்கிய குறிப்பு : மருத்துவரை நாடினால் போதாது, மருத்துவருக்குப் பொய் சொல்லவும் கூடாது. மருத்துவருக்கு உண்மையைக் கூறினால், உங்கள் நோயை அவர் கண்டுபிடிக்க இலகுவாயிருக்கும் அல்லவா…!

முடிவு : நோயைக் குணமாக்க விரும்பும் அனைவரும் இதனைப் பின்பற்றவும் வேண்டும்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.