உள (மன) நோயை விரட்ட

அயலிலுள்ளவரின் நடத்தையைப் பாருங்கள். இயல்புநிலையைக் கடந்துவிட்டாரா? (அதாவது வழமைக்கு மாறான நடத்தையைக் கொண்டிருக்கிறாரா?) மாற்றாரை வெறுத்து ஒதுங்குகிறாரா? தனக்குள்ளே புலம்புகிறாரா? இயல்பாக, நலமாக வாழும் ஒருவருடன் ஒப்பிடுகையில் எத்தனை வேறுபாடுகள் தென்படுகிறது?

இவ்வாறனவர்களுக்கு வழமைக்கு மாறான நடத்தைகள் (Abnormal behavior) தொடங்குகிறது எனப் பொருள்படும். இதற்கு உளவியல் (மனோதத்துவ) மருத்துவரின் மதியுரையைப் பெறவும். அவரது மதியுரைப் படியே உள(மன)நல மதியுரைஞரை நாடலாம்.

முதலில் இவற்றைச் செய்து பாருங்கள்:-
இயல்புநிலைக்குக் குறித்த ஆளை வரவைக்க முயலுங்கள். அதாவது, அவரது விருப்புக்கு இணங்கி, அவரோடு அன்பாகப் பழகி, அவருடன் நல்லுறவைப் பேணி அணைத்துக் கொள்ளுங்கள். மேலும், பாதிப்புக்கள் தென்படின் குறித்த ஆளைப் புதிய சூழலுக்குள் உள்வாங்கவும். அதாவது, புதிய இடத்தில், புதிய உறவுகளுடன் பழகவிட்டு, தன்னம்பிக்கையை ஊட்டித் தனிமையில் வாழவிடாது தடுக்கவும்.

முடிவாகச் சொல்வதானால், குறித்த ஆளின் விருப்பம் ஈடேறுவதாலும் குறித்த ஆளின் விருப்புக்கேற்ற இடத்தில் வாழ இடமளிப்பதாலும் அந்த ஆளின் உள்ளத்தில் ஆழமாகப் (அடி/உள் மனத்தில்) பதிந்திருக்கும் உளப்பாதிப்புகளை ஏற்படுத்தும் தூண்டிகளை நினைவூட்டாமல் செய்யலாம். இதனால் குறித்த ஆளை வாட்டிய உள (மன) நோயை விரட்டலாம்.

2 responses to “உள (மன) நோயை விரட்ட

  1. அவரது விருப்புக்கு இணங்கி, அவரோடு அன்பாகப் பழகி, அவருடன் நல்லுறவைப் பேணி அணைத்துக் கொள்ளுங்கள். //சரியான யோசனை. வாழ்த்துக்கள் நண்பரே