நலமாக வாழ

உடற் தூய்மை என்பது
உடலைத் தேய்த்து நிராடி
அளவோடு உண்டு
நடந்து பயின்று
மகிழ்வோடு பழகி
உறுதியாய் இருத்தலே!
அப்படியாயின்
உளநோய் எப்படி?
கோபம், பொறாமை, எரிச்சல்
மட்டுமல்ல
தாழ்வான எண்ணம்
மாற்றாரை வீழ்த்தி முந்த நினைப்பது
இன்னும் எத்தனையோ இருந்தாலும்
நேர் விளைவு, பக்க விளைவு , பின் விளைவு
எல்லாவற்றையும் மறந்து
முடிவெடுப்பதால் கிடைக்கும் அறுவடையே
உளநோயின் தூண்டி!
உளநோயின் தூண்டிகளை
முளைவிடாமல் தடுத்தால்
நலமாக வாழலாமே!

2 responses to “நலமாக வாழ

 1. இப்பதிவு தமிழ்நண்பர்கள் தளத்தில் வெளியாகிய போது நண்பர் வினோத் (கன்னியாகுமரி) அவர்கள் இவ்வாறு கருத்திட்டார்.

  உளநோயின் தூண்டிகளை
  முளைவிடாமல் தடுத்தால்
  நலமாக வாழலாமே!
  சரியாகச்சொன்னீர்கள்
  பாதி நோய்களுக்கு மனமே காரணம்
  மீதி நோய்களுக்கு சுற்றுச்சுழலும், வாழ்க்கைமுறையும் காரணம்.

 2. நண்பர் வினோத் (கன்னியாகுமரி) அவர்களின் கருத்துக்கு இவ்வாறு பதிலிட்டேன்.

  உள(மன) நோய்க்கு
  உள்ளமே(மனமே) மருந்து என
  நீங்கள் குறிப்பிட்டாலும்
  நம்மாளுகள் நலமாக வாழ
  சுற்றுச் சுழலும், வாழ்க்கை முறையும்
  ஒத்துழைக்காது – ஆனால்
  உளத்தூய்மையும்
  சுற்றுச் சுழலுக்கு ஏற்ப ஒத்துப்போதலும்
  ஒழுக்கமான வாழ்க்கை முறையைப் பேணலும்
  நம்மாளுகளே மேற்கொண்டால்
  நலமாக நீடூழி வாழலாமே!