உளநல மதியுரையும் வழிகாட்டலும் தேவையா?

உளநல மதியுரையும் வழிகாட்டலும் எல்லோருமே செய்கின்றனர். உளச் சிக்கல் ஏற்படின் இதன் மூலம் நலம் பெறலாம். ஆயினும், மருத்துவரை அணுகாமல் இதனை நாடக்கூடாது.
“உள்ளம் என்பது ஆமையடா-அதில்
உண்மை என்பது ஊமையடா” என்ற
பாடல் அடிகளை நினைவு படுத்தினால் உளச் சிக்கலையும் அதற்கான மருந்தையும் அறியலாம்.
ஒவ்வொரு மனிதரும் தமது உள்ளத்திற்கு உள்ளேயே எத்தனையோ இலக்குகளை அடையமுடியாது சந்தித்த தோல்விகளையும் சுமைகளையும் வைத்திருக்கலம். அவற்றை நம்பிக்கையான பிறரிடம் வெளிப்படுத்தாமல்
தமது உள்ளம் கனக்கச் சுமப்பதால் உளநோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனைக் கண்டறிந்து உள்ளக் கனத்தைக் குறைக்க உளநல மதியுரையும் வழிகாட்டலும் உதவலாம்.
உள்ளம் என்பது மூளையின் செயற்பாட்டை ஒப்பிடப் பயன்படும் பெயராகும். மூளை நரம்புகள் உடலின் செயற்பாட்டுக்குப் பக்கத்துணையாக இருப்பதால் உளப் பாதிப்புகள் உடல் நோய்களை ஏற்படுத்தவும் தூண்டலாம். எனவே, உளச் சிக்கல்களுக்கு உளநல மருத்துவரை நாடுவதே நல்லது.
மருத்துவரல்லாத பிறரிடம் உளநல மதியுரையும் வழிகாட்டலும் பெற முன் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி உளக்குறைபாடு இருப்பதை மருத்துவரால் உறுதிப்படுத்தவும். ஏனெனில், உடல் நோய்களும் உள நோய்களை ஏற்படுத்தவும் தூண்டலாம்.
உளநல மதியுரையும் வழிகாட்டலும் வழங்குவதாகக் கூறும் எவரிடமும் நேரே செல்லாமல் மருத்துவர் குறிப்பிடும் ஒருவரிடம் நாடுவதே நல்லது.
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகுமென்பதில் உண்மை இருக்கு! அதாவது, உளக் கனம் சற்றுக் குறைய புதிய எண்ணங்கள் உள்ளத்தில் புகுவதால் உள மாற்றம் ஏற்படலாம். மேலும், இதற்கு சுய முன்னேற்ற நூல்களும் உதவலாம். தன்னையே தானறிந்து இவ்வடிப்படைக் கருத்துகளை அறிந்தவருக்கு உளநல மதியுரையும் வழிகாட்டலும் தேவையா? உங்கள் பதில்களை இத்தளத்தில் பதிவு செய்யுங்களேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.