ஏன்? எதற்கு? எப்போது?

ஏன் வழிகாட்டலும் மதியுரையும்?
அறியாத, தெரியாத எதனையும் அறிந்து முன்னேற

எதற்கு வழிகாட்டலும் மதியுரையும்?
இலகுவாக வெற்றியடைய

எப்போது வழிகாட்டலும் மதியுரையும்?
ஏதாவது அறியாத, தெரியாத வேளையில்

வழிகாட்டலும் மதியுரையும் பற்றி…
உள்ளத்தில்(ஆழ் மனத்தில்) இருப்பது தான் நடத்தைகளாக வெளிப்படுகிறது. சில நடத்தை மாற்றங்கள் நோய்களை உண்டாக்கும். எனவே, உள்ளத்தில் நல்லெண்ணங்களைத் தோற்றுவித்து நோய் நெருங்காமல் பேண வழிகாட்டலும் மதியுரையும் உதவுகின்றது. வழிகாட்டலும் மதியுரையும் எமக்குத் தேவையில்ல என்போருக்கு; தாம் தமது உள்ளத்தில் நல்லெண்ணங்களைப் பேணினால் போதும்.

Advertisements

2 responses to “ஏன்? எதற்கு? எப்போது?

 1. ச சிவகுமாரன்

  தங்கள் எழுத்துப் பணியினை நீண்ட காலமாக வாசித்து அவதானித்துவரும் ஒருவன் யான். நான் ஏலவே (ஏற்கனவே) தங்களுக்கு அறிமுகமானவன்தான் … தொலைபேசியிலும் ஒருதடவை உரையாடியதாக ஞாபகம். யாழ்ப்பாவாணன் முகநூலிலும் நிர்வாகியில் ஒருவராக என்னையும் இணைத்துள்ளீர்கள். இப்போ ஞாபகம் வரும் என நினைக்கின்றேன்.
  தங்கள் பணி கடினமானது போற்றுதற்குரியது அதில் மறுகருத்து இல்லை… ஆனால் அடியேனின் சிறியதொரு கருத்து….
  தமிழ் காலாகாலமாக பிற மொழிகளால் ஊடுருவப்பட்டு பிறமொழிச் சொற்களே புதிய சந்ததியினரால் தமிழ்ச் சொல்தான் என்று நம்பி உபயோகித்துக் கொண்டிருக்கும் அளவுக்கு அதனோடு இரண்டற கலந்துவிட்ட மொழி. தற்போது அதனை முழுமையாக தூய்மைப் படுத்துதல் என்பது நினைத்துப் பார்க்கமுடியாத அளவு பெரியபணி என்பது மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் ஆபத்தாக அமையக்கூடியது. எவ்வாறெனில் அதனை விளக்குவது மிகப்பெரிய ஆராய்ச்சிக் கட்டுரையாக விரியும். உதாரணமாக….
  “1. வகுப்பில் கணக்குத் தெரியாமல் ஆசிரியரிடம் அடி வேண்டியதைக் கண்டு உள்ளம் இழகி கணக்குச் சொல்லித் தந்த வகுப்பு மாணவரை முதல் நாளிலேயே பிடித்துப் போகிறது.”… இது மேலேயுள்ள தாங்கள் எழுதியுள்ள ஒரு வாக்கியம். இதிலே பிறமொழி கலவாது எழுதுதலில் உள்ள கவனம், எழுத்துப் பிழையற்ற , இலக்கணப் பிழையற்ற வாக்கியமாக எழுதக் கவனம் செலுத்தப்படவில்லை.
  வேண்டுதல் என்பது இரத்தல் என்ற பொருளில் வரும் ஆகவே “அடி வேண்டி” என்பது “அடி வாங்கி” என வந்தால் சிறப்பாகவிருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். அதேபோல “இழகி” என்பது “இளகி” என்றே எழுதப்படவேண்டும்.. நானும் முற்றும் தெரிந்த அறிஞன் அல்ல … இது என் கருத்து அவ்வளவே. நாமிருவரும் தமிழ்மேற் கொண்ட காதலால் இவ்வாறு கருத்து பரிமாறுதல் எம்மிடையே கருத்து வேறுபாட்டை கொண்டுவராது என திடமாக நம்புகின்றேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் தூய தமிழ் எனும் போது பிறமொழி கலவாமை என்பது ஒரு அம்சம். அதனூடு லகர ளகர ழகர வேறுபாடுகள், எழுத்துப் பிழையின்மை, இலக்கணச் சுத்தம் என்று பல விடயங்கள் இணைந்தே அதனைப் பூரணப்படுத்த முடியும். இது சம்பந்தமாக எனக்கு நிறைய உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம் உண்டு. எழுதுவதில்த் தான் சிக்கல்… நேரமில்லை என்பது ஒன்று . மற்றையது சிரமம். நாம் தொலைபேசியிலோ.. அல்லது இணைய அழைப்புக்களினூடாகவோ நாம் பேசினால் நிறைய இது பற்றிப் பேசலாம்
  முடிந்தால் தங்கள் தொலைபேசி எண் , தங்கள் மின்னஞ்சல் போன்றவற்றைத் தந்தால் தொடர்ந்து தொடர்பாட வசதியாகவிருக்குமல்லவா?

  • இப்படியொரு அழகான கருத்துரையை http://yarlpavanan.wordpress.com இல் பதிந்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும். தமிழ் பேணும் தளமது. பிறமொழி கலவாது நற்றமிழை நடைமுறைப்படுத்தத் தேவையென சில நூல்களை http://yarlpavanan.wordpress.com தளத்தில் ‘தமிழ்மின்நூல்கள்’ பக்கத்தில் நுழைந்து பதிவிறக்க வழி செய்துள்ளேன். தூய தமிழ் பேணுவதில் உள்ள சிக்கலைச் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். தங்கள் கருத்தை உள்ளத்தில் இருத்தி எனது பணியை மேலும் விரிவாக்க எண்ணியுள்ளேன். தங்கள் கருத்துகள் என்னைப் புண்படுத்தியதில்லை. தங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறேன்.

   “1. வகுப்பில் கணக்குத் தெரியாமல் ஆசிரியரிடம் அடி வேண்டியதைக் கண்டு உள்ளம் இழகி கணக்குச் சொல்லித் தந்த வகுப்பு மாணவரை முதல் நாளிலேயே பிடித்துப் போகிறது.”… இது மேலேயுள்ள தாங்கள் எழுதியுள்ள ஒரு வாக்கியம். இதிலே பிறமொழி கலவாது எழுதுதலில் உள்ள கவனம், எழுத்துப் பிழையற்ற , இலக்கணப் பிழையற்ற வாக்கியமாக எழுதக் கவனம் செலுத்தப்படவில்லை.
   வேண்டுதல் என்பது இரத்தல் என்ற பொருளில் வரும் ஆகவே “அடி வேண்டி” என்பது “அடி வாங்கி” என வந்தால் சிறப்பாகவிருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். அதேபோல “இழகி” என்பது “இளகி” என்றே எழுதப்படவேண்டும்.” என்ற விளக்கம் https://mhcd7.wordpress.com/ என்னும் தளத்தில் “உளவியல் நோக்கில் முதல் உறவு” என்ற பதிவிற்கான பதிலாக அமைந்திருக்கிறது. தாங்கள் சுட்டிக்காட்டியபடி திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

   https://mhcd7.wordpress.com/about/ என்ற பக்கத்தில் என்னைத் தொடர்புகொள்ளத் தேவையான தகவல் இருக்கிறது.