எயிட்ஸ் நலம்

எயிட்ஸ் (AIDS) வராமல் பேணும் பணி (எயிட்ஸ் நலம்)
[Aids Prevention Care Duty]

Aids visit your body when you must know…

ஆட்கொல்லி நோய் அல்லது உயிர்கொல்லி நோய் எனச் சுட்டப்படும் எயிட்ஸ் (AIDS – Acquired Immune Deficiency Syndrome) வராமல் பேண நாம் என்ன செய்யலாம் என்பதை விளக்குவதே இப்பக்கத்தின் நோக்கமாகும். அதாவது, எயிட்ஸ் எப்படித் தோன்றியது பற்றி அலசுவதை விட எமது உடலில் எப்படியாவது தொற்றிக் கொள்ளாமல் தடுக்கும் வழிகளை விளக்கும் பணி இதுவாகும்.

ஒருவர் உடலில் இருந்து பிறிதொருவர் உடலுக்கு எயிட்ஸ் வைரஸ் (Virus) தொற்றிவிடாமல் அரசும் பொது நிறுவனங்களும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்குவதே எமது முதற் செயற்பாடாக இருக்க வேண்டும்.

மணமாகுமுன் பாலுறவு வைத்திருப்பின்; பாலுறவில் பங்கெடுத்த ஒருவருக்கு எயிட்ஸ் வைரஸ் இருப்பின்; அந்த ஆள் பிறிதொருவரை மணமுடிக்கும் போது அடுத்த ஆளுக்கும் தொற்று ஏற்படுகிறது. இதனைத் தடுக்கக் குருதிச் சோதனை செய்த பின்னர் மணமுடிக்க முயற்சி செய்வது நலம். ஆயினும், குருதி வகையில் ஒற்றுமை (Blood Matching) சோதிக்கப்பட்டு மணமுடிக்கும் வழக்கமும் உண்டு. எனவே, நம்பிக்கையான ஒருவருக்கு ஒருவர் (ஒருவனுக்கு ஒருத்தி) மணமுடித்துப் பாலுறவைப் பேணுவதே சரியான வழி.

ஒருவருக்கு ஒருவர் என்ற எல்லையை மீறுவதும் மணமுடிக்க முன் பாலுறவை நாடுவதும் எயிட்ஸை அணைத்துக் கொள்வதற்குச் சமனாகும். இதற்குப் பாலியல் பற்றிய சரியான அணுகுமுறையைத் தெரிந்து வாழ்வதே பாதுகாப்பானது.

”சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்பது முன்னோர் கூறும் முடிவுரை. அவர்கள் காலத்தில் ஆண், பெண் பல அடி தொலைவில் நின்று பழகுவதும் தேவையற்ற வகையில் பழகாமல் இருப்பதும் இயல்பு. பெண் பிள்ளை பெரிய பிள்ளையானால் வீட்டுக்குள் மூடி வைத்து வளர்ப்பதும் அக்காலத்தில் இருந்தது. ஆகையால், மணமுடித்ததும் மேலுள்ள முடிவுரையைச் செயல் வடிவில் மணமானவர்கள் கற்றனர். அன்று ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற ஒழுங்கைப் பேணும் சூழலும் காணப்பட்டது. ஆனால். இன்று நிலைமை வேறு.

இன்றைய திரைப்படங்கள், மேலை நாட்டுப் பண்பாட்டு வருகை, நம்மாளுகள் வெளிநாடு சென்று திரும்புதல், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஊடகத் தொழில்நுட்பம், இவற்றோடு பாலுணர்வைத் தூண்டும் விளம்பரங்கள், இவற்றிற்குக் கைகுலுக்கும் சூழல் என்பன காளை, வாலைகளைத் தவறான வழிகளுக்கு இட்டுச் செல்கின்றன. இந்நிலையில் பாலியல் என்பது உடலில் ஏற்படும் உணர்ச்சிகளை அவ்வப்போது போக்கிக்கொள்ளும் செயற்பாடு எனத் தவறாகக் கற்பிக்கப்படுவதும் இளசுகளுக்கு வாய்ப்பாக அமைகிறது.

ஆண் பால், பெண் பால் வேற்றுமை அமைப்புகளை உடலமைப்பில் இருந்து வேறாக்கிப் பார்க்கத் தொடங்கியதும் இளசுகள் பெரிசாகிட்டினம் என்று பொருள் கொள்ளலாம். இப்பாகுபாடு தான் பாலியல் என்று கருதமுடியாது. இப்பாகுபாட்டின் படைப்பு, படைக்கப்பட்ட வேற்றுமை உடலமைவின் செயற்பாடு மற்றும் பயன்பாடு பற்றிய அறிவியலே பாலியல் அறிவாகும். அப்படியாயின் காளை, வாலை, இளசுகள், ஏன் கிழடுகளும் கூடத் தவறு செய்வதற்குப் பாலியல் மட்டும் காரணமாகாது; உளவியல் அணுகுமுறைகளும் சரியாகப் பயன்படுத்தப்படாமலும் இருக்கலாம்.

ஆண், பெண் வேற்றுமைப் படைப்புகளை, அப்படைப்பின் நோக்கத்தையும் பள்ளியில் படித்திருக்கலாம். மணமுடித்த பின்னரே அவற்றைப் பயன்படுத்தச் சூழல் இடமளிக்கிறது. தவறான வழிநடத்துகைக்கு உட்படாது மணமுடிக்கும் நாள் பின்தள்ளப்படுவதால் அவரவர் உள்ளத்தில் இளமை பற்றிச் சிந்திக்க வாய்ப்புள்ளது. ஆயினும், ஒழுக்கம் என்ற வட்டத்திற்குள் இருப்பவர்கள் பாலியல் தவறு செய்வதில்லை. தவறான வழிநடத்தலுக்கு உட்பட்டவர்கள் பாலியல் தவறு செய்யத் தூண்டப்படுகிறார்கள். தவறு செய்யத் துணிந்தவர்களுக்கு எதிர்காலம் மற்றும் எயிட்ஸ எச்சரிக்கை எதுவுமே உள்ளத்தில் தோன்றுவதில்லை.

எமது சூழலில் மணமுடித்தவர்கள் கூட பாலியல் தவறு செய்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே. கணவன், மனைவி இருவருக்குமிடையே உடலமைப்பு (பலம், பலமின்மை) அதாவது உடல் ஒத்துழைப்பு, உள முரண்பாடு (விருப்பம், விருப்பமின்மை) இருக்கக்கூடும். அவ்வேளை ஆளுக்கு ஆள் இன்னொரு துணையை நாடுவது தான் தவறு. மேலும் இடவமைவு இல்லாவிட்டாலும் பிள்ளைகள் தூக்கத்தில் இருக்கிறார்கள் என நினைத்துக் கூடுவதால் ஏற்படும் ஒலியெழுப்புதல்; குழந்தைகளை அச்சமூட்டவும் இளசுகளைத் தவறு செய்யத் தூண்டவும் இடமளிக்கிறதே.

You have AIDS when your body is…

முடிவாகச் சொல்வதானால் பாலியல் வாழ்வுக்குத் தேவை, பாலியல் சுகம் பெறாதவர் அரை மனிதரென மணமுடித்தும் வைக்கிறார்கள். ஆனால், பாலியலை முறையாக, அழகாக, ஒழுக்கமுடன் பயன்படுத்த முயன்றாலே நன்மை, இந்த நிலையை எட்ட உள்ளத்தைத் தயார்ப்படுத்தும் செயலே உளவியல் அணுகுமுறை எனலாம். சிறந்த உளவியல் அணுகுமுறையால் தான் பாலியலில் உச்சக்கட்டச் சுகத்தை அடையலாம். ஏனையோருக்கு மகிழ்வின்மை, மகிழ்வின்மையால் கெட்ட வழியை நாடும் எண்ணம் ஏற்படலாம். மேலும், பாலியல் தவறு செய்வோருக்கு எயிட்ஸ் மட்டுமல்ல வேறு பல நோய்களும் ஏற்படலாம்.

பாலியல் சுகத்திற்காகச் சாவை அணைக்கலாமா? மக்களால் சூழலில் இருந்து ஒதுக்கிவைக்கும் நிலையை அடையலாமா? உங்கள் உள்ளத்தைத் தொட்டு உணர்ந்தால் சிறந்த உளவியல் அணுகுமுறையைப் பின்பற்றுங்கள். அதுவே ‘எயிட்ஸ் வராமல் பேணும் பணி’ என உணர்வோம்.

அறிவை வளர்ப்போம், பணத்தைப் பெருக்குவோம் (நிலையான வருவாய்), மக்கள் ஏற்கும் அகவையில் மணமுடிப்போம், மணமுடித்த பின்னர் கணவனும் மனைவியும் காதலிக்கலாம், முற்றிய காதலின் முடிவில் பழுத்த பாலியல் சுகத்தைப் பருகலாமே. ஒருவர் விருப்பை ஒருவர் ஏற்பதால் காதல் கூடும், காதலுடன் உடலும் கூடினால் மிகுதி சொல்லவும் வேண்டுமா? இவை ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் ஒழுங்கில் வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இல்லற வாழ்வில் நுழைந்தவர்களுக்கு இவ்வாறான உளப் பாலியல் அறிவு தேவை.

தவறான வழியில் பாலியல் சுகத்தை நாடாது இருப்போம்; ஒழுக்கம் பேணுவோம் உளப் பாலியல் அறிவில் தெளிவைப் பெறுவோம்; மகிழ்வான வாழ்க்கையை அமைப்போம்; எப்போதும் ‘எயிட்ஸ் (AIDS – Acquired Immune Deficiency Syndrome)’ என்ற உயிர்கொல்லி நோய் அல்லது ஆட்கொல்லி நோய் எமக்கு வராமல் அல்லது எம்மை நாடாமல் பேணுவோம். ஒவ்வொரு இணையர்களும் இவ்வாறு வாழ்தலே எயிட்ஸ் (AIDS) வராமல் பேணும் பணிக்கு வழங்கும் ஒத்துழைப்பாகும்.

இவ்வண்ணம்
காசி.ஜீவலிங்கம் (யாழ்பாவாணன்)
Counsellor (உளநல/ குடும்பநல மதியுரைஞர்)

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s