உள நலம்

உளநலப் பேணுகைப் பணி
(Mental Health Care Duty)

முற் பகுதி:
உளவியல் என்பது உள்ளம் பற்றிய அறிவியல் என்று கூறலாம். ஒருவர் உள்ளத்தை இன்னொருவர் புரிந்து கொள்ள உதவுவது உளவியல் அறிவு தான். இதனடிப்படையிலேயே உளநல வழிகாட்டலும் மதியுரையும் மேற்கொள்ளப்படுகிறது. உங்கள் உண்மைச் சிக்கலை, உங்கள் உளநலத்தை நன்கறிந்த பின் உளவியல் கற்றவர்களால் வழங்கப்படும் பணியே உளநலப் பேணுகைப் பணி ஆகும். இவர்கள் உங்களாலே நீங்கள் உங்கள் சிக்கலுக்கு முடிவு எடுக்கக் கற்றுக்கொடுக்கிறார்கள்.

உலகில் உள்ள உயிர்கள் உடலைத் தான் பேணுகின்றன. நம்மாளுகளும் அப்படித்தான்… ஆனால், உள்ளம் என்பது நம்மாளுகளுக்கு மட்டுமே உண்டு. ஆகையால், உளநலப் பேணுகைப் பணி நம்மாளுகளுக்குத் தேவையே!

உடல் நலம் பற்றி நோய் வந்ததும் சிந்திக்கின்றோம். நோய் உடலில் மட்டும் தங்கியிருப்பதில்லை. அது உளநலத்திலும் தங்கியிருக்கிறதே! உளநலத்தைப் பேணுவதன் மூலம் உள நோய்களை மட்டுமல்ல உடல் நோய்களையும் குணப்படுத்தலாம். தங்கள் உளநலம் பற்றிய வழிகாட்டலையும் மதியுரையையும் கேள்வி-பதில் மூலமாக பெற முயலுங்கள். வழிகாட்டலும் மதியுரையும் உங்கள் வாழ்வில் பல நன்மைகளைத் தரும்.

நமது வாழ்வு நமது கையில் இருக்கையில், வழிகாட்டலும் மதியுரையும் நமக்குத் தேவையில்லையே. அதாவது நாம் சரியான முடிவு எடுத்து, சரியான வழியில் செல்வோமாயின் வழிகாட்டலும் மதியுரையும் எமக்குத் தேவைப்படாது. விரும்பின் சுய முன்னேற்ற நூல்களை அல்லது வாழ்வின் வெற்றிப் படி நூல்களைப் படிப்பதால் சரியான முடிவு எடுத்து, சரியான வழியில் செல்லத் தேவையான அறிவைப் பெற வாய்ப்புண்டு. முயற்சிகளில் பின்னடைவுக்கு இடமிருக்கக் காரணம் இருப்பின், அவற்றை நீக்கிக்கொள்ள வழிகாட்டலும் மதியுரையும் உதவலாம்.

இணையத் தளங்களில் என் போன்றவர்கள் உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்கலாம். இவர்களிடம் உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் பெறுவதால் நன்மை கிடைக்கப்போவதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்களின் கூற்றை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

உடல் நோய் காரணமாகச் சில உளமாற்றங்கள் இடம்பெறலாம். அதனை மருத்துவரிடம் காட்டிச் சுகப்படுத்தலாம். உடல் நோய் ஏதுமில்லாத வேளை, உளமாற்றங்கள் இருப்பின் மருத்துவர் வழிகாட்டினால் மட்டும் அருகிலுள்ள உளநல மதியுரைஞரிடம் உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் பெறுலாம். இணையத் தளங்களில் மதியுரை வழங்குவோரை நாடக்கூடது.

உண்மை என்னவெனில், அருகிலுள்ளவர் உங்கள் சொல். செயல் இரண்டையும் கண்காணித்து நல்ல தீர்வைத் தர வாய்ப்புண்டு. இணையத் தளங்களில் மதியுரை வழங்குவோருக்கு உங்கள் எழுத்து மூல விரிப்பையே பார்க்கமுடிகிறது. அதனை வைத்து உங்கள் உண்மை நிலையை அறிய வாய்ப்பில்லை. ஆகையால், இணையத் தளங்களில் மதியுரை வழங்குவோரால் உங்களுக்குச் சரியான தீர்வைப் பெற்றுத் தர வாய்ப்பில்லை.

பத்திரிகைகளில், சஞ்சிகைகளில், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இணையப் பக்கங்களில் கேள்வி-பதில் பகுதி இருக்குத்தானே! அதில் பொய்ப் பெயர், முகவரி வழங்கிக் கேட்கப்படும் கேள்விகள் யாவும் குடும்ப நலம் பற்றியதே. அதாவது, அந்தரங்கக் கேள்விகளே! இவற்றைக் குடும்பநல மருத்துவரிடம் நேரில் கேட்பதே சரியானது. அதாவது, மருத்துவர் நோயாளியை நேரில் சோதித்துத் தக்க சிகிச்சை வழங்குவார். கேள்வி-பதில் பகுதிகளில் கேட்பதை விட மருத்துவரை நாடுவதே நன்மை தரும்.

“அடேய்! யாழ்பாவாணா! அப்ப ஏன்டா இந்தத் தளத்தைத் தொடங்கினாய்?” என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் கேட்பது சரி தான்! நோய்கள் பற்றிய விரிப்புகளைத் தவிர்த்துக் குழந்தை, கல்வி, பதின்ம அகவைச் சிக்கல், தொழில், காதல், திருமணம், குடும்ப உறவுகள் எனச் சில விரிப்புகளுக்கு விளக்கமளிக்கலாம். மருத்துவரை நாட அஞ்சுவோருக்குத் தெளிவை ஏற்படுத்தி மருத்துவரை நாட வைக்கலாம். நொந்தவர்களைத் தற்கொலைக்குப் போகவிடாமல் நெடுநாள் வாழவைக்கலாம். வெற்றிகளைக் குவிக்கவும் தொலைநோக்கு முடிவுகளை எடுக்கவும் உதவலாம். இவ்வாறான நல்லெண்ண நோக்குடனேயே இத்தளத்தைத் தொடங்கி உள்ளேன்.

Guidance and Counselling

பிற் பகுதி:
என் இனிய அன்பு உள்ளங்களே! “கற்றது கைப்பிடி மண்ணளவு, கற்காதது உலகளவு” என்பது முதுமொழி. நான் கற்றது எனது சின்னி விரல் சிறிய நகத்தளவு, இன்னும் என்னளவு உயரத்திற்குக் கற்றுமுடிக்க எவ்வளவு நாள் எடுக்குமோ எனக்குத் தெரியாது. கல்வி என்பது அச்சுத் தாள் சான்றிதழ் அல்ல. கற்றவர்கள் என்றால் தம் பெயருக்குப் பின்னால் சேர்க்கின்ற பட்டங்களிலுமில்லை. அப்படியென்றால், கடுகளவு கற்றாலும் பிறருக்குப் பயன்படுத்தும் அளவிலேயே படித்தவர் என்று சூழவுள்ளோர் எம்மைக் கணிக்கின்றனர்.

எனது பணி வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே ஆகும். அதற்குப் போதிய தகுதி என்னிடம் இல்லாமலிருக்கலாம். “நுனிப் புல் மேய்ந்த பசு” போன்று நான் கற்ற கல்வியைப் பலருக்குப் பயன்படுத்த வே “உளநலப் பேணுகைப் பணி (Mental Health Care Duty)” என்ற இவ் இணையப்பக்கத்தை வடிவமைத்துள்ளேன். இதன் முக்கிய பணி உளநல வழிகாட்டலும் மதியுரையும் (Psychological Guidance and Counselling) வழங்குவதே ஆகும்.

Online Counselling Duty

உள்ளம் உடலிலும் உடல் உள்ளத்திலும் தங்கியிருக்கிறது. உடலைப் பேணும் அதேவேளை உள்ளத்தையும் பேண வேண்டும். இதற்கு உளநல வழிகாட்டலும் மதியுரையும் பயன்படுகிறது. இதற்கு முன் மருத்துவரை நாடி உளக் குறைபாடா? உடல் குறைபாடா? எம்மில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும். பின்னரே மருத்துவர் குறிப்பிடும் நம்பிக்கைக்கு உரியவரிடம் உளநல வழிகாட்டலும் மதியுரையும் பெற முயற்சிக்கலாம்.

உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்கும் பணியைப் பல இணையத் தளங்கள் மேற்கொள்கின்றன. எடுத்துக்காட்டாகச் சில தளங்களின் முகவரிகளைக் கீழே தருகின்றேன்.
Http://www.happylife.lk
Http://www.familyhealth.gov.lk
http://www.wedananasala.org
http://www.onlinecounselling4u.com/
http://themarriagecounselingblog.com
http://www.guystuffcounseling.com/
Http://www.guidance2live.com/ask-a-counselor

லேயுள்ள முதல் மூன்று முகவரிகளையும் சொடுக்கினால் தமிழில் அதனைக் கையாளமுடியும். மேற்காணும் தளங்களில் உளவியல், பாலியல், மருத்துவம் எனப் பல அறிவியல் சார்ந்த பதிவுகளைப் பார்வையிடலாம். இப்பக்கங்களில் மருத்துவர்களும் அறிஞர்களும் உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் காத்திருக்கிறார்கள்.

இவ்வாறான இணையப் பக்கங்களைப் பார்த்துப் பயன்பெறும் போது அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத அல்லது தவறான வழிகாட்டல் தளங்களைப் பார்வையிட்டு ஏமாறாதீர்கள். அவ்வாறான இணையப் பக்கங்களில் வாசகரைத் தவறான வழிகளில் இட்டுச் செல்வதற்கும் பணச் சுருட்டலுக்கும் இளைய தலைமுறையினருக்குக் கேடு விளைவிக்கும் செயலுக்கும் இடமிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் வெளிவருகின்றன.

தனிப்பட்ட ஐயங்களை (பாலியல்/ அந்தரங்கம்) அதாவது தெரிந்தவர்களுடன் பகிராமல் அல்லது போலி (Fake) அடையாளங்களை வெளிப்படுத்தி ஐயங்களைப் போக்கிக் கொள்ள முயலுவோர் தான் கூகிளில் தேடிப்போய் இவ்வாறான தளங்களில் விழுகின்றனர். வேண்டாத தளங்களில் தலையை நீட்டாமல் உங்கள் தனிப்பட்ட ஐயங்கள் எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் உங்கள் யாழ்பாவாணனிடம் கேட்டுப்பெறலாமே!

அது சரி, உளநலப் பேணுகைப் பணி (Mental Health Care Duty) எனும் இத்தளத்தை வைத்து என்ன தான் பண்ணுவீங்கள் என்று நீங்களும் கேட்கலாம். அதற்கு மீண்டுமொரு முறை என் பதிலைத் தர விரும்புகிறேன்.
என் அறிவிற்கெட்டிய வரை உலகெங்கும் வாழும் எல்லோராலும் ஏற்கக்கூடிய முடிவுகளையோ தீர்வுகளையோ இப்பக்கத்தினூடாக எனது வாசகர்களுக்குத் தரமுடியுமென நம்புகிறேன். எவ்வாறான சிக்கல்களை அல்லது பிணக்குகளை எப்படித் தீர்ப்பது; அதனை எவ்வாறு கையாள்வது; எக்கட்டத்தில் எந்த முடிவை எடுப்பது என்பன எனது உளநல வழிகாட்டலிலும் மதியுரையிலும் (Psychological Guidance and Counselling) இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வண்ணம்
காசி.ஜீவலிங்கம் (யாழ்பாவாணன்)
Counsellor (உளநல/ குடும்பநல மதியுரைஞர்)

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s